பக்கம்:ஆதி அத்தி.pdf/47

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


ஆதி அத்தி 45 ஆடல்களை யெல்லாம் செய்து காண்பிக்கப் போகிருராம். அதையும் கண்டு மகிழுங்கள். (மக்கள் மகிழ்ச்சியோடு கலையத் தொடங்கு கிரு.ர்கள்.) திரை காட்சி நான்கு (காவிரி மணற்பரப்பிலே மற்ருேரிடம். சாத்தனும் மாரனும் எதிர் எதிராக வேகமாக வந்து எதிர் பாராத விதமாக மறுபடியும் சந்திக்கின்றனர்.) சாத்தன் : ஏண்டா டேய், நாட்டியக் கொட்ட கைக்குவந்தா முறுக்குக் கொடுக்கிறேன்னு சொல்லிவிட்டு ஏமாத்திவிட்டா போளுய்? கூட்டத்திலே எப்படியோ நளுவீட்டுப் போயிட்டயே? மாரன் : அடே உன்னேட இப்போப் பேச நேர மில்லே -காவிரியாற்றிலே சேரநாட்டு இளவரசர் என் னென்னமோ வித்தையெல்லாம் காட்டப்போருராம்... அங்கே போகனும். (அவசரமாகப் போகிருன்.) சாத்தன் (மாரனை வழிமறித்து) : ஆத்து வெள் ளத்திலயா? மாரன் : ஆமாண்டா, வெள்ளத்திலே முளுகி முளுகி வித்தையெல்லாம் செய்வாராம். சாத்தன் (ஆச்சரியத்தோடு) : அப்பாடா, அதெப் படி முடியும்? அவருக்கு நீச்சல் தெரியுமாடா? மாரன் : டேய், அவர் உன்னைப்போல வருசத் துக்கு ஒருக்கா ஆத்திலே முளுகுகிறவரல்ல... சாத்தன் : டேய் மாரா , என்னைப் பத்தி மாத்திரம் நீ பேசாதே-உன்னுடைய சமாச்சாரத்தை எடுத்தாபேச எடுக்கிற வாய்கூட நாறுமே...

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஆதி_அத்தி.pdf/47&oldid=742435" இருந்து மீள்விக்கப்பட்டது