46 ஆதி அத்தி மாரன் : அதுக்குத்தான் என்னுட முறுக்கு மேலே அத்தனை ஆசையோ? சாத்தன் (சமாதானமாக) : மாரா, கோவிச்சுக் கிட்டயே? என்னமோ இன்னிக்கு எல்லாரும் சந்தோசமா இருக்கிறபோது நாமும் கொஞ்சம் தமாஸ் பண்னக் கூடாதா? எங்கே இப்படி நாலு முறுக்குத் தள்ளு. மாரன் : வாடா, ஆத்தங்கரையிலே போய்க் கொடுக்கிறேன் நேரமாச்சு... சாத்தன் : ஏண்டா நீ ஆட்டனத்தி ஆட்டம் பார்க்கப் போறயா? இல்லாட்டி வியாபாரம் பண்ணப் போறயா? மாரன் : நான் என்ன பண்ணினுலும் உனக்கென் னடா? உனக்கு வேண்டியது வாய்க்கரிசி நாலு முறுக்குத் தாண்டா? (போகிருன்.) சாத்தன் (அவனைத் தொடர்ந்துகொண்டே): மாரா ஆத்துலே திடீர்னு இப்போ வெள்ளம் அதிகமா வருதாமே? மாரன் : வந்தா அதைப்பற்றி உனக்கென்னடா கவலை? நீயா ஆத்துலே முளுகப்போறே? சாத்தன் : இல்லேடா, அந்த சேரநாட்டு இள வரசர் வெள்ளத்திலே..... மாரன் : அதெல்லாம் அவர் சமாளிச்சுக்குவாருடா. அவுங்கெல்லாம் நீ ரி லி .ே ய குடியிருக்கிறவங்க. மீன் குஞ்சுக்கு நீச்சல் பளக்கவேணுமா? சாத்தன் : நம்ம ஊரிலே மாத்திரம் தண்ணிக்குப் பஞ்சமாடா? இருந்தாலும் உனக்கு நீஞ்சத் தெரியுமா?
பக்கம்:ஆதி அத்தி.pdf/48
Appearance