உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:ஆதி அத்தி.pdf/51

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஆதி அத்தி 49 சரணம் கங்கை போற்றிடும் எங்கள் காவிரிபாயும் நாடு கழனி யெங்கனும் செந்நெல் கரும்பும் ஓங்கிடும் நாடு பொங்கும் அன்பினர் நாடு போரில் பின்னிடா நாடு எங்கும் கலைகள் ஓங்கும் ஏற்றம் கொண்டநல் நாடு -(இணை) (அத்தி வெள்ளத்தில் புகுந்து பல வித்தைகள் புரிவதைப் பார்த்து ஆச்சரியப்பட்டு மக்கள் பேசிக்கொள்கிரு.ர்கள்.) முதற் குரல் : சேரநாட்டு இளவரசர் நீரிலே குதித்து என்னென்ன அற்புதங்களெல்லாம் செய்கிருர்! இரண்டாம் குரல் : அவரென்னவோ தண்ணிரிலேயே பிறந்தவரைப் போலல்லவா விளையாடுகிருர்! மூன்ரும் குரல் : பரத நாட்டியத்திலே அவருக்கு எத்தனை திறமை இருக்கிறதோ அத்தனை திறமை நீர் விளையாடுவதிலும் இருக்கிறதே! முதற் குரல் ; அவர் நீரில் விளையாடுவதைப் பார்ப் பதற்கும் நமது இளவரசி ஆதிமந்தி பாடுவதைக் கேட்ப பதற்கும் எவ்வளவு ஆனந்தமாக இருக்கிறது! இரண்டாம் குரல் அவர்கள் இரண்டு பேருக்கும் அமைந்த பொருத்தம்போல உலகத்திலே வேறு யாருக் கும் அமைய முடியாது. மூன்ரும் குரல்: அவர்களுடைய காதலே காதல்... முதற்குரல் : சோழ நாட்டு மக்களும் வஞ்சி நாட்டு மக்களும் அவர்கள் இரண்டு பேரையும் உள்ளன்போடு போற்றுகிருர்கள். இரண்டாம் குரல் : அதோ, ஆட்டனத்தி வெள் ளத்தை எதிர்த்து நீஞ்சுவதைப் பாருங்கள். 4

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஆதி_அத்தி.pdf/51&oldid=742440" இலிருந்து மீள்விக்கப்பட்டது