ஆதி அத்தி 5l ஆதிமந்தி : இவ்வளவு நேரம் மூச்சுத்தாங்க முடியுமா? இதென்ன விபரீதமாக இருக்கிறதே! (விம்மிப் பெருமூச்சு விடுகிருள், அவள் முகத்தில் திகில் குரூர்க் காட்சியளிக்கிறது. பலர் ஆதி மந்தியைச் சூழ்ந்து வருகிரு.ர்கள்.) முதற் குரல் : நான் நமது வேந்தரிடம் ஒடி விஷயத் தைத் தெரிவிக்கிறேன்......... அம்மணி பயப்படாதீர்கள். (ஆதிமந்தி தேம்புங் குரல் கேட்கிறது. பலபேர் கவலையோடு ப ல வ | று பேசிக்கொள்ளு கிரு.ர்கள்.) ஆதிமந்தி : ஐயோ, ஆட்டனத்தி-அவர் எங்கே? பல குரல்கள் : நான் முழுகிப் பார்க்கட்டுமா? -நீ முழுகினல் மட்டும் போதுமா? ஒடக்காரர் களையும் வலைக்காரர்களையும் கூட்டி வாருங்கள். -இதோ நான் கூட்டி வருகிறேன். (ஒருவன் ஒடுகிருன்.) -அந்தோ, அவர் எதற்காக இந்த வெள்ளத்தில் இப்படி விளையாடினர்? -இதென்ன மாயமோ தெரியவில்லையே! -அதோ அரசரும் அரசியும் வருகிருர்கள்-அவர் களுக்கு வழி விடுங்கள். (எல்லோரும் விலகி நிற்கிருர்கள். கரிகாற் பெரு வளத்தானும் வேண்மாளும் முன்னல் வருகிருர் கள். அமைச்சர் பின்னலே வருகிரு.ர்.) கரிகாலன் : ஒடக்காரர்கள் எங்கே? உடனே வெள்ளத்தில் ஒடங்களைவிட்டுத் தேடச் சொல்லுங்கள். அமைச்சரே, ஒவ்வொரு மடுவையும், சுனேயையும் நன்முக அதிவேகமாகப் பார்க்க வேண்டும். அமைச்சர் : இதோ எல்லாம் ஏற்பாடு செய் இறேன்...ஆதிமந்தியைக் கவனித்துக் கொள்ளுங்கள். (அமைச்சர் வேகமாகப் போகிருர்,)
பக்கம்:ஆதி அத்தி.pdf/53
Appearance