ஆதி அத்தி 53 காட்சி ஆறு (காவிரிக் கரையிலே மற்ருெரு பக்கம்: மக்கள் நடமாட்டமே இப்பொழுதில்லை; மாரன் தனது கூடையைக் கீழே வைத்துவிட்டுக் கவலையோடு உட்கார்ந்திருக்கிருன். சாத்தன் எதிரே வருகிருன்.) மாரன் : சாத்தா, எங்கே திரும்பிக்கூடப் பார்க் காமல் போருயே...? சாத்தன். பார்த்து என்ன பண்ணரது? காலேயிலே உன் முகத்திலே முளிச்சுத்தான் இன்னேக்கு இப்படி யாச்சு. மாரன் : அட வா. முறுக்கு வேணும்னு அப்போப் பிடிச்சுக் கேட்டாயே-இந்தா வேணும்கிறதை எடுத் துக்கோ-வா. காசும் வாண்டா, ஒண்ணும் வேண்டாம். சாத்தன் : உன் முறுக்கைக் கொண்டுபோய் அந்தக் காவிரி வெள்ளத்திலே கொட்டு. அப்பக்கூட அதுக்குப் பசி யடங்காது-எனக்கொன்னும் வேண்டாம். மாரன் : ஏண்டா, நீயும் பார்த்தியே-அவர் நல்லாத்தானே நீந்தி விளையாடினர்? சாத்தன் : ஆமாம்-நல்லாத்தான் நீந்தி ஆட்ட மெல்லாங் காட்டினர். இருந்தாலும் இந்த வெள்ளம் எப்படியோ வஞ்சனை செய்துவிட்டதே... மாரன் (எழுந்து சாத்தன் அருகே சென்று) . ஒடக் காரரெல்லாம் போனங்களே, ஒன்றும் கிடைக்கவே இல்லையா? சாத்தன் : வலையிலே என்னென்னவோ கிடைச்சுது. ஒரு வலையிலே ஒரு வாழை மரம் குலையோடு வந்தது. மட்டை வந்தது. மரம் வந்தது-அதெல்லாம் வந்து என்னத்துக்காச்சு? தேடின பொருள்தான் கிடைக்கவே இல்லை.
பக்கம்:ஆதி அத்தி.pdf/55
Appearance