பக்கம்:ஆதி அத்தி.pdf/58

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


5Ꮾ ஆதி அத்தி (அலறி நிற்கிருள் கரிகாலன் அவள் அருகில் சென்று ஆறுதல் கூற முயல்கிருன்.) கரிகாலன் . இந்தப் பதினறு நாழிகையாக ஒடக் காரர்களும் வேலைக்காரர்களும் புனல் விளையாட்டுநடந்த இடத்திலிருந்து கீழே ஐந்து நாழிகை தூரத்திற்குக் காவிரியிலே பார்க்காத இடமில்லை. அரிப்புக்காரர்கள் வலைவீசிப் பார்க்காத மடுவுமில்லை; குழியுமில்லை. இப் பொழுது அவர்கள் இன்னும் கீழே தேடிக் கொண்டிருக் கிரு.ர்கள். வேண்மாள் ; இவ்வளவு நேரமாகக் கண்டுபிடிக்க முடியாவிட்டால் ஆட்டனத்தியை இனி எப்படி உயி ரோடு பார்க்கப் போகிருேம்? கரிகாலன் : (வேண்மாள், விதி எப்படியோ கொடுர மாக நம்மை வஞ்சித்துவிட்டது; ஆட்டனத்தியைக் கவர்ந்து சென்றதுமல்லாமல் நமது மகளின் புத்தியையு மல்லவா கலங்கச் செய்துவிட்டது? அவளை எப்படியாவது குணமடையச் செய்தால் அவளாவது நமக்கு ஒரளவு ஆறுதல் தருவாள். வேண்மாள் : கணவனை இழந்த கோலத்திலே அவளேக் கண்டு எப்படித்தான் நாம் ஆறுதல் கொள்ள முடியும்? (விம்மி யழுகிருள்.) கரிகாலன் : அவளை இந்த நிலையில் பார்க்கவும் கஷ்டமாகத்தான் இருக்கிறது. ஆனால், அவள் மூளை முற்றிலும் குழம்பிப்போப் முழுப் பைத்திய நிலையிலே அவளைப் பார்க்கவேண்டி ஏற்பட்டால் என் உள்ளமே வெடித்துப் போகும். வேண்மாள் (கரிகாலன் கண் கலங்குவதைப் பார்த்து): நீங்களே இப்படிக் கூறினல் நான் என்ன

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஆதி_அத்தி.pdf/58&oldid=742447" இருந்து மீள்விக்கப்பட்டது