மூன்ணு >ダー式一=二ーz z一ー/ காதலுக்காக அனைத்தையும் தியாகம் செய்த வர்கள் பலர் உலகத்திலே வெவ்வேறு நாடுகளில் தோன்றியிருக்கிரு.ர்கள். காதல், காதல், காதல்; காதல் போயிற் காதல் போயிற் சாதல், சாதல், சாதல் என்ற உறுதியோடு நின்ற அந்த அமரக் காதலர் களின் சரிதம் வெவ்வேறு மொழிகளில் உயர்ந்த இலக்கியங்கள் தோன்றக் காரணமாக இருந்திருக் கின்றன. மக்களின் உள்ளத்தை அந்த இலக்கி யங்கள் என்றும் கவர்கின்றன. அந்தக் காதலர்களை உலகம் ஒருநாளும் மறப்பதில்லை. அப்படிப்பட்ட காதலர்களின் வரிசையிலே சேர்ந்தவள் ஆதிமந்தி. அகநானூற்றிலும் சிலப்பதி காரத்திலும் அவளுடைய காதலின் பெருமை கூறப் பட்டுள்ளது. ஆற்று வெள்ளம் காதற் கணவனே அடித்துச் சென்ற பின்னர் ஆதிமந்தி கதறி யழுத தைக் கண்டு கல்லும் புல்லும் உருகின. அதனாலேயே 'ஆதிமந்தி அரற்றிற்ைபோல’ என்று கூறுகின்ற வழக்கம் எழுந்தது. புகார் எனப்படும் காவிரிப்பூம்பட்டினத்துக் கற்புடைமகளிர் எழுவருள் ஆதிமந்தி ஒருத்தி. இவள் நல்லிசைப் புலமை வாய்ந்தவள். கரிகாற் பெருவளத்தான் என்ற புகழ் மிக்க சோழ அரசனின் மகள்,
பக்கம்:ஆதி அத்தி.pdf/6
Appearance