பக்கம்:ஆதி அத்தி.pdf/63

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஆதி அத்தி 6| சர ணம் மாந்தருக் கெல்லாம் உயிர் வழங்கிடும் தாயே நீயுன் மருகளும் என் உயிரையே வாங்கிடுவாயோ வேந்தராம் சோழர் குலத்தையே வாழ்விப்பாய் என் வேதனை நீயுணராயோ நானுமுன் மகள் அல்லவோ (காவிரி) (கால்கள் தடுமாற உலக நினைவே இல்லாமல் ஆதி மத்தி ஆற்ருேரத்திலேயே செல்லுகிருள்.) திரை காட்சி மூன்று (காவிரிக் கரையில் வேருேர் இடம். மூன்று பெண்கள் அழகாக அணிந்தும் உடுத்தும் நிற் கிருர்கள். காலை நேரம். ஏழுமணவியிருக்கும்.) முதற் பெண்: என்னமோ அம்மா, இந்தக் காவிரி நதிக்கு இத்தனை கல்மனசு இருக்கக் கூடாது. நமது இளவரசியும் வஞ்சிநாட்டு இளவரசர் ஆட்டனத்தியும் எத்தனை உயிருக்குயிராக இருந்தார்கள்! அதைக் காண இந்த நதிக்குப் பொறுக்கவில்லையே? இரண்டாம் பெண்: ஆதிமந்தியினுடைய அழுகை யைக் கேட்டால் கல்லும் கரைந்து போகும். மூன்ரும் பெண்: இளவரசி நேற்று இரவு முழு வதும் காவிரிக் கரையிலே இருந்து கொண்டு ஆட்டனத்தி வாராயோ வாராயோ என்று பாடிக் கதறிக்கொண்டே இருந்தார்களாம் இரண்டாம் பெண்: சேரநாட்டு இளவரசர் வெள் ளத்திலே மறைந்தது எப்போ? மூன்ரும் பெண்: நேற்று மத்தியானம்-உச்சி வேளைக்குக் கொஞ்சம் முன்னதாக.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஆதி_அத்தி.pdf/63&oldid=742453" இலிருந்து மீள்விக்கப்பட்டது