பக்கம்:ஆதி அத்தி.pdf/64

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஆதி 316 SAASA SAASAASAASAASAA AAAMMAAA AAAA AAAASASASS 6.3 (மேலும் ஆறு பெண்கள் வந்து சேருகிருர்கள். எல்லோரும் சேர்ந்து பாடிக்கொண்டு கைதட்டி ஆடுகிருர்கள்.) எல்லோரும்: (பாட்டு) சோலையிலே மலரெடுத்துச் சாமிக்குநாம் போட்டோம் துன்பமெலாம் போயொழியும் ஏனினிமேல் வாட்டம் காலையிலே எழுந்தவுடன் கையெடுத்துப் பணிந்தோம் கடவுளருள் காத்திடுமென் றுள்ளமிகத் துணிந்தோம் ஆட்சிமுறை நீதிமுறை எல்லாம் சோழன் பண்பாம் அவனிருக்கும் போதெமக்கே வாழ்விலேது துன்பம் காட்சியிலே கலைகளிலே ஓங்குமுயர் நாடு காவிரியின் கருணையிஞல் வளங்கொழிக்கும் காடு மேழிச்செல்வம் ஓங்கியும் குடிகள் இன்பம் ஓங்கியும் மேதினியின் திலகமதாய் ஒளிரும்சோழ நாடிதே வாழியவோ வாழியவோ கடவுளருள் வாழி வாழியெங்கள் கரிகால வளவன் என்றும் வாழியே : (குரவைக்கூத்து முடியும் தருணத்திலே ஆதிமந்தி வினோதமாக உடுத்தும் அணிந்தும் வருகிருள். எல்லோரும் கடலே விடுத்து அவளைப் பரிவோடு பார்க்கிரு.ர்கள்.) ஆதிமந்தி: அம்மா, தோழிகளே. நீங்களெல்லாம் எவ்வளவு அழகாக ஆடுகிறீர்கள்? உங்கள் ஆட்டத்தைக் கண்டால் வஞ்சிநாட்டு இளவரசர் எத்தனை சந்தோஷப் படுவார் அவரை நீங்கள் இங்கே வரும்படி கூப்பிட வேண்டாமா? முதற் பெண் (மெதுவாக): இளவரசி, நாங்களெல் லாம் அவரை எதிர்பார்த்துக் கொண்டுதான் இருக் கிருேம்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஆதி_அத்தி.pdf/64&oldid=742454" இலிருந்து மீள்விக்கப்பட்டது