பக்கம்:ஆதி அத்தி.pdf/65

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

64 ஆதி அத்தி ஆதிமந்தி: நீங்கள் எதிர்பார்த்து என்ன செய்வது? காவிரித்தாய் அவரை விட்டால்தானே? (அவள் கண்களில் நீர் தளும்புகிறது.1 இரண்டாம் பெண்: அம்மனி, அவர் சீக்கிரம் வந்து விடுவார்-கலங்காதீர்கள். ஆதிமந்தி: அவர் எங்கே சென்ருரோ? இந்த வழி யாகத்தான் போயிருப்பார்-நீங்கள் எல்லாம் என்ைேடு வருகிறீர்களா? எல்லோருமாகப் போய்த் தேடுவோம். மூன்ரும் பெண்: நாங்கள் எல்லோரும் வருகிருேம். அதற்காகத்தான் காத்துக் கொண்டிருக்கிருேம். ஆதிமந்தி தோழிகளே, நீங்கள் அவரை இந்த வழியிலே பார்க்கவில்லையா? முதற் பெண் (தடுமாற்றத்துடன்): பார்த்தோ... இல்லை...நாங்கள் அந்தச் சமயத்திலே இங்கே வர முடி யாமல் போய்விட்டது. ஆதிமந்தி: அதோ அந்தப் பறவைகள் எல்லாம் உங்களிடம் சொல்லியிருக்குமே? அவையெல்லாம் ஆட்ட னத்தியின் ஆடலைப் பார்த்துப் பார்த்து ஆனந்தப் படுமே-உங்களிடம் அவை சொல்லவில்லையா? நான் கேட்கட்டு மா? (பாட்டு) பல்லவி எங்கு சென்ருய் ஆட்டனத்தீ-உள்ளம் ஏங்குகின்றேன் அறியாயோ? (எங்கு) அனுபல்லவி பொங்கிவரும் வெள்ளமதில் புகுந்தாடும் திறலோனே திங்களனி ஈசன்தரும் திருமகன்போல் எழிலோனே (எங்கு)

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஆதி_அத்தி.pdf/65&oldid=742455" இலிருந்து மீள்விக்கப்பட்டது