பக்கம்:ஆதி அத்தி.pdf/67

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

66 ஆதி அத்தி கெல்லாம் புனல் விளே யாட்டு விழா நேற்று நடந்ததுஉனக்கு இன்றைக்கு விழாவா? பொன்னி: காவிரியிலே புனல் விளையாட்டு நமக்குத் தினமுந்தான் நடக்கிறது. இப்போ நான் நீர்விளையாடக் கூப்பிடவில்லை. காவிரியிலே போய் நாலு நண்டுக்குட்டி பிடித்துக்கொண்டு வரலாமென்று கூப்பிட்டேன். மருதி (சிரித்துக் கொண்டு): அதென்னத்திற்கு நண்டுக்குட்டி..? பொன்னி விளையாடுவதற்கு வேனும் மருதி. மருதி: விளையாடுவதற்கு நண்டுக்குட்டியா? உனக் கென்ன பயித்தியம் பிடித்துவிட்டதா என்ன? பொன்னி: ஆமாம், மருதி-பயித்தியந்தான். யார் முகத்தையும் பார்க்காமல் இப்படி இங்கே இன்னும் கொஞ்சம் நாட்களுக்கு அடைபட்டுக்கிடந்தால் எனக்குப் பயித்தியமே பிடித்துவிடும். மருதி: ஏன் பொன்னி, நீ யார் முகத்தையும் பார்க் சிறநில்லையென்று பொய்தானே சொல்லுகிருய்? நீ என் முகத்தைப் பார்க்கவில்லையா? பொன்னி: அந்த அளவிற்காவது தயவு வைத்தாயே அது போதும்-இந்தப் பதினேந்து நாளாக உன்னைத் தவிர வேறு யாரையாவது பார்க்க வகையுண்டா? மருதி: ஏன் என் முகத்தைப் பார்க்கிறது உனக்குப் பிடிக்கவில்லையா? பொன்னி: நான் என்ன உனக்குக் காதலன? காதலனக இருந்தால் உன் முகத்தையே ஆயுள் முடிகிற வரையிலும் பார்த்துக் கொண்டிருக்கலாம். மருதி: ஏன் நீயே எனக்குக் காதலனக இருந்து விடேன்?

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஆதி_அத்தி.pdf/67&oldid=742457" இருந்து மீள்விக்கப்பட்டது