பக்கம்:ஆதி அத்தி.pdf/70

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஆதி அத்தி 69 மருதி (சிரித்துக் கொண்டு): பொன்னித்தாயே, உன்னுடைய இந்தப் பெரிய தியாகத்திற்காக நான் என்றும் நன்றியோடிருப்பேன். பொன்னி: கரிகாற் பெருவளத்தானுடைய சபை யிலே அமைச்சர் வேலை வாங்கிக் கொடுப்பதை மட்டும் மறந்துவிடாதே, வெறும் வாய் வார்த்தையால் நன் றியைத் தெரிவித்துவிட்டு எல்லோரையும்போல ஏமாற்றி விடாதே! (இருவரும் சிரீக்கிரு.ர்கள்.) மருதி: முதலில் இப்போ உனக்கு நண்டுக்குட்டி பிடித்துக்கொடுக்கிறேன். வா. அமைச்சர் வேலையைப் பிறகு பார்த்துக்கொள்ளுவோம். பொன்னி: அப்பா, அதற்காவது கருனைவந்ததே. கொஞ்ச நேரற்திற்காவது உனது ஆடலையும் பாடலையும் நிறுத்தி வைக்க மனசுவந்ததே, அதே போதும். மருதி (போய்க்கொண்டே): ஏன், எனது ஆடலும் பாடலும் அத்தனை கேவலமாக இருக்கிறதா என்ன? பொன்னி (மருதியின் தோளைப் பிடித்துக்கொண்டு): மருதி, இத்தனை நேரம் விளையாட்டாகப் பேசிளுேம். இப்பொழுது உண்மையைச் சொல்லுகிறேன். உனது ஆடலையும் பாடலையும் இப்படிக் கூடவே இருந்து அனுப விக்க நான் முன்னுளிலே தவம் செய்திருக்கவேணும். ஆளுல் நீ இப்படி இரவு பகலாக வஞ்சி நாட்டிளவரசரை மகிழச்செய்ய வேண்டுமென்ற ஆர்வத்தினலே பயிற்சி செய்து உடம்பைக் கெடுத்துக்கொள்ளக் கூடாதே என்பதுதான் என்னுடைய கவலை. வஞ்சிக்கொடி போன்ற உன்னுடைய மேனி இத்தனை பயிற்சியையும் தாங்குமா என்று எனக்குக் கவலையாக இருக்கிறது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஆதி_அத்தி.pdf/70&oldid=742461" இருந்து மீள்விக்கப்பட்டது