பக்கம்:ஆதி அத்தி.pdf/72

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


72 ஆதி அத்தி பொன்னி: நேற்றுப் புதுப்புனல் விழா என்பதைக் கூட நீ மறந்துவிட்டாய்-எனக்கும் ஐம்பத்தாறு நாழி கையும் வீட்டுக்குள்ளேயே சிறைத் தண்டனை. மருதி: பொன்னி, மறுபடியும் நீ அந்தப் பழைய ஒப்பாரியை வைத்து விடாதே. கழார்ப் பட்டனத்தில் தானே புதுப்புனல் விழாவெல்லாம்-இங்கே நமக் கென்ன வந்தது? பொன்னி புதுப்புனல் விழாவை நாடெங்கும் கொண்டாட வேண்டுமென்று அரசர் விரும்புவதாகப் போன மாதந்தானே என்னிடம் சொன்னுய்? இப்போ வஞ்சிநாட்டு இளவரசரைப் பார்க்கப் போகிற உற்சா கத்திலே அதையும் மறந்துவிட்டாயா? மருதி (ஆட்டனத்தியைத் தற்செயலாகப் பார்த்து): பொன்னி: அதோ யாரோ வெள்ளத்திலே அடிபட்டு வந்து கிடக்கிறது போலத் தெரிகிறது. (வேகமாக அருகில் சென்று பார்க்கிருள். பொன்னி யும் பின் தொடருகிருள்.) ஐயோ. உடம்பிலே உயிரிருப்பது போலத் தெரிய வில்லையே? யார் இவர்? பார்த்தால் மிகவும் கம்பீரமான தோற்றமுடையவராக இருக்கிரு.ர். (ஆட்டனத்தியின் பக்கத்தில் அமர்ந்து நெஞ்சின் மேல் கை வைத்துப் பார்க்கிருள். முகத்திலே கை வைத்து மூச்சு வருகிறதா என்று பார்க் கிருள்.) பொன்னி: வெள்ளத்திலே அகப்பட்டு இறந்து போளுரோ என்னவோ-அவரைப் பார்! மன்மதனைப் போல இருக்கிருர், மருதி, வெள்ளத்தில் அகப்பட்டவர் களுக்குச் சிகிச்சை பண்ணத்தான் உனக்கு நன்ருகத் தெரியுமே-எல்லாம் செய்து பார்-ஒருவேளை உயிர் இருந்தாலும் இருக்கும்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஆதி_அத்தி.pdf/72&oldid=742463" இருந்து மீள்விக்கப்பட்டது