உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:ஆதி அத்தி.pdf/73

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஆதி அத்தி ጎ3 (மருதி சிகிச்சைகள் செய்கிருள். ஆட்டனத்தியின் நெஞ்சிலும் கைகளிலும் தேய்த்துச் சூடு பண்ணுகிருள்.) மருதி : இவர் தண்ணிரை ஒன்றும் அதிகம் குடித்து விடவில்லை. வெள்ளத்திலே நீந்துவதில் கெட்டிக்காரர் போலிருக்கிறது...... பொன்னி, நீ வீட்டுக்கு ஒடிப்போய் புதிதாக ஆடைகள் எல்லாம் எடுத்துக் கொண்டுவா. அவர் மூர்ச்சையடைந்துதானிருப்பதாகத் தோன்று கிறது. என்னுடைய தந்தை வஞ்சி நாட்டிற்குப் போல தற்குப் புதிய ஆடையெல்லாம் வாங்கி வைத்திருக்கிறார். பொன்னி : இதோ ஒரு நொடியில் வந்துவிடு கிறேன். நீ கவனமாக சிகிச்சையெல்லாம் செய்...ஆடை யெல்லாம் எங்கிருக்கும்? மருதி : அந்தப் பெரிய பேழையிருக்கிறதே அதி லேயே இருக்கும், வேகமாக எடுத்துவா. (பொன்னி வீட்டை நோக்கி ஓடுகிருள். மருதி ஆட்டனத்தியின் உள்ளங்கையைத் தேய்த்துச் சூடுண்டாக்கிப் பிறகு அவன் கைகளை மேலும் கீழுமாகத் துரக்குகிருள். ஆட்டனத்தி மெது வாக மூச்சு விட்டுக் கண்களேத் திறந்து பார்க் கிருன்.) மருதி (பெரு மகிழ்ச்சியோடு) ஆஹா, மூச்சு மெதுவாக வருகிறது-அவர் கண்களைத் திறந்து பார்க் கிறார்...(அத்தியைப் பார்த்து) அப்படியே அசையாமல் படுத்திருங்கள். உங்கள் உடம்பு மிகவும் நவித்திருக் கிறது. அத்தி (மெதுவாகத் தணிந்த குரலில்): நீ......யார்? நான்...எங்கே இருக்கின்றேன்? மருதி : உங்களுக்கு இனிமேல் ஒன்றும் ஆபத் தில்லை. பேசாமல் படுத்திருங்கள். உங்கள் காலிலே உணர்ச்சி நன்ருக வரும்படி நான் செய்கிறேன்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஆதி_அத்தி.pdf/73&oldid=742464" இலிருந்து மீள்விக்கப்பட்டது