பக்கம்:ஆதி அத்தி.pdf/77

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஆதி அத்தி 77 அமைச்சர்: எனக்கு ஒன்றும் தோன்றவில்லை. எப்படியும் நாம் செய்கின்ற முயற்சியைச் சிறிதும் தளர விடாமல் காவிரி கடலில் கலக்கும் இடம் வரையில் அலசிப் பார்த்து விடலாம். கரிகாலன் : கடற்கரை வரையிலும் பார்ப்பதில் பயன் கிடைக்கும் என்று எனக்குத் தோன்றவில்லை. எதற்கும் பாருங்கள். கழாருக்கு அருகிலேதான் முக்கிய மாகக் கவனம் செலுத்த வேண்டும். காவிரிப்பூம் பட்டினம் வரையில் அடித்துச் சென்றிருந்தால் அவரை உயிரோடு காண முடியாது. அமைச்சர் : (துக்கத்தோடு கம்மிய குரலில்): உயி ரோடு காண வேனு மென்பதுதான் என்னுடைய ஆசை. கரிகாலன் : அமைச்சரே, உங்கள் குறிப்பு எனக்கும் தெரிகிறது. இங்கே தேடினல் இனிமேல் அவரை உயிரோடு காண்பது அரிதுதான் (அரசன் குரல் அடைத்துக் கொள்ளுகிறது. அவன் கண்கள் கலங்கு கின்றன)...அமைச்சரே...எனது கனவு இப்படியா முடிய வேணும்? அமைச்சர் : அரசே, நீங்கள் மனம் தளரக்கூடாது. அரசியார் இப்பொழுதே மிகவும் சோர்ந்து படுத்த படுக்கையாய் விட்டார்கள். ஆதிமந்தியின் நிலைமையை வேறு கவனிக்க வேண்டும். கரிகாலன் : ஆதிமந்தி இப்பொழுது எங்கே இருக் கிருள்? அமைச்சர் : அவர் காவிரி யோரமாகவே நடந்து கொண்டிருக்கிரு.ர்கள். ஒவ்வொரு கல்லையும் மரத்தை யும் பார்த்து ஆட்டனத்தியைப் பற்றி விசாரித்துக் கொண்டே போகிரு.ர்கள்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஆதி_அத்தி.pdf/77&oldid=742468" இருந்து மீள்விக்கப்பட்டது