பக்கம்:ஆதி அத்தி.pdf/8

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7 கரிகாலனைவிட அப்போரிலே பெற்ற புறப்புண் னிற்கு நாணி வடக்கிருந்த பெருஞ் சேரலாதன் 'நின்னிலும் நல்லனன்றே என்று நயம்படப் பாடிப் பாராட்டியிருக்கிரு.ர். கரிகாற் பெருவளத்தானைக் கருங்குழலாதனரும் வெண்ணிக் குயத்தியாரும் பாடியிருக்கிரு.ர்கள். மேலும் பொருநராற்றுப்படை, பட்டினப் பாலே என்ற நூல்களுக்கும் தலைவன் அவனே. அவனைப் பற்றிய குறிப்புக்கள் சிலப்பதிகாரம், கலிங்கத்துப் பரணி முதலிய நூல்களில் காணப்படுகின்றன. அவனுக்கு ஒருத்திக்கு மேற்பட்ட மனேவியர் உண் டென்று கூறுவார்கள். ஆனால், அவர்கள் பெயர் தெரியவில்லை. ஆதிமந்தியின் வரலாறு பல ஆண்டுகளுக்கு முன்பே என் உள்ளத்தைப் பெரிதும் கவர்ந்தது. நாடகப் பண்பு மிகுந்தது அது. மேடையில் நடிப்ப தற்கும், திரைப்படமாகப் பிடிப்பதற்கும் ஏற்ற சிறந்த அம்சங்கள் பெற்றது. அதை அடிப்படை யாக வைத்து முன்பு நான் எழுதிய நாடகத்தை ஒலிபரப்பியபோது அதைப் பலரும் பாராட்டி ஞர்கள். அவ்வாறு ஒலிபரப்பிய நாடகத்தைப் பலவகைகளிலும் மாற்றி விரிவுபடுத்தி இங்குப் புதிதாக எழுதியிருக்கிறேன். பாத்திரங்களின் பண்புகள் முன் னிலும் தெளிவு பெற்றுள்ளன. கரிகாற் பெருவளத்தானுடைய பெருமையோடு போட்டியிடத் தக்க பெருமை வாய்ந்தவனுக பெருஞ்சேரலாதன் வெண்ணிக் குயத்தியாருக்குத் தோன்றுகிருன் அல்லவா? அதேபோல ஆதிமந்தி யுடன் போட்டியிடத் தகுதி வாய்ந்தவளாக மருதி இந்நாடகத்தில் தோன்றுவதை அனைவரும் உணருவார்களென்று நம்புகிறேன். క్ట్ర I5ー5ー56 -பெ. தூரன்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஆதி_அத்தி.pdf/8&oldid=742471" இலிருந்து மீள்விக்கப்பட்டது