உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:ஆதி அத்தி.pdf/80

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

80 ஆதி அத்தி மருதி (சற்றுக் கோபமாக): பொன்னி, உனக்கு விளை யாடுவதற்கும் வேடிக்கை பேசவும் சமயமே தெரி வதில்லை. பொன்னி : மருதி, நான் என்ன சொல்லிவிட் டேன் இப்படி முகத்தைக் காட்டுகிருய்? அவரோ இன்னும் எழுந்து நடக்கக்கூடச் சக்தியில்லாமல் படுத்த படுக்கையாகக் கிடக்கிருர், வெள்ளத்திலே அடித்து வந்தவரை நீ பிழைக்க வைத்தாய். அவரை வீட்டிலே வைத்திருப்பதைப்பற்றி உன் தந்தை ஒன்றும் தவருக நினைக்க மாட்டாரென்றுதான் சொன்னேன். மருதி : சரி, அவர் என்ன நினைத்தாலும் அதைப் பற்றிக் கவலையில்லே. நீ மட்டும் இந்த இடத்தை விட்டு எங்கும் போகக்கூடாது. பொன்னி : தாயே, அப்படியே உன் ஆணைப்படியே நடக்கிறேன். கோபித்துக் கொள்ளாதே. மருதி (புன்முறுவல்பூத்து): பொன்னி, நான் ஏதா வது கடுமையாகப் பேசியிருந்தால் என்னை மன்னித்துக் கொள். உன் மனம் நோகுமாளுல் என்னுல் அதைத் தாள முடியாது. பொன்னி : போடி, அசடு எனக்கொன்றும் வருத்தமில்லை. நீ சொல்லுகிறபடி இங்கேயே இருக் கிறேன். கவலைப் படாதே. ஆமாம்...அவர் யாரென்று கேட்டாயா? மருதி : அதுதான் அவர் இன்னும் சொல்லவில்லை. ஒரு சமயத்திலே சொல்லுகிறவர் போல வாயெடுக்கிரு.ர். மறு டியும் அதை மறைத்துக்கொள்கிருர். அவர் யாராக இருக்க முடியுமென்று உனக்கு ஏதாவது தோன் றுகிறதா?

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஆதி_அத்தி.pdf/80&oldid=742472" இலிருந்து மீள்விக்கப்பட்டது