ஆதி அத்தி 81 பொன்னி : பார்த்தால் அரசகுமாரனைப்போல இருக்கிருர். ஆனல் அரசகுமாரன் இப்படி ஆற்றிலே எதற்காக வெள்ளத்தில் அகப்படப் போகிருர்? மருதி : அதுதான் எனக்கும் விளங்கவில்லை. அற்புதமான பாட்டெல்லாம் எழுதுகிருர். அற்புத மாகப் பாடுவாரென்றும் தெரிகிறது. ஆனல் இன்னும் அதற்கு வேண்டிய வலிமை உடம்பிலே ஏற்படவில்லை. அவர் உயிர் பிழைத்ததே ஆச்சரியம். பொன்னி : ஒரு வேளை அவர் நீச்சல் போட்டி யிலே சேர்ந்திருப்பாரோ? மருதி : பொன்னி, அதைப்பற்றி நாம் ஏன் இப் பொழுது கவலைப்படவேண்டும்; கடைசியில் அவரே ஒரு நாளைக்குச் சொல்லாமலா போய்விடுவார்? இப் பொழுது உடம்புக்கு வலிமை ஏற்படும்படி செய்வது தான் நமது முதல் வேலை. பொன்னி : அதுதான் இரவும் பகலும் அவர் பக்கத்திலிருந்தே நீ கவனித்துக் கொள்ளுகிருயே? இன்னும் என்ன செய்ய வேண்டும்? மருதி : அவருக்குப் பணி செய்வதிலும் அவருக்கு முன்னலே ஆடுவதிலும் பாடுவதிலும் எனக்கு ஒரு தனி இன்பம் பிறக்கிறது பொன்னி. பொன்னி : இல்லாவிட்டால் நீ இவ்வளவு அக்கறை எடுத்துக்கொள்ளுவாயா? மருதி (சிரித்து) ; போடி, யாராக இருந்தாலும் ஆற்றிலே விழுந்து இப்படி மூர்ச்சையடைந்து கிடந்தால் அவரைக் கவனிக்காமல் விட்டு விடுவோமா? பொன்னி : கவனிக்க மாட்டோம் என்று நான் சொல்லவில்லையே? மருதி, மாலை நேரம் அவருக்கு ஏதா வது உணவு கொடுத்தாயா? 6
பக்கம்:ஆதி அத்தி.pdf/81
Appearance