&2 ஆதி அத்தி
மருதி : ஆமாம். அவர் இவ்வளவு நேரம் தனியாக இருந்துகொண்டு ஏதாவது கவலைப்படுவார். நீ போய் பால் கஞ்சியில் தேன்விட்டு எடுத்து வா. நான் அவரைப் போய்ப் பார்க்கிறேன்.
(இருவரும் போகிருர்கள்.)
திரை
காட்சி இரண்டு
(அதே மாலை நேரம். அத்தி ஒரு மஞ்சத்திலே படுத் திருக்கிருன். மருதி அவன் கால்களை வருடிக் கொண்டு அருகிலே ஒரு ஆசனத்தில் அமர்ந் திருக்கிருள்.) அத்தி : மருதீ, என் கால்களே வருடியது போதும்... விட்டுவிடு. எத்தனை நேரம் இப்படி நீ உன் கை நோக எனக்குப் பணி செய்வாய்?
மருதி : ஆற்று வெள்ளத்தை எதிர்த்துப் போராடி உங்கள் கால்கள் நலிந்திருக்கின்றன. மெதுவாக வருடி ல்ை அவைகளுக்கு வலிமை ஏற்படும்.
அத்தி எனது கால்களை நிலத்திலே ஊன்றினல் இன்னும் தள்ளாடுகின்றன. இருந்தாலும் எனக்காக இரவு பகலாகத் துன்பப்படுவதை என்னுல் சகிக்க முடிய வில்லை.
மருதி : எனக்கு இது துன்பமே இல்லை. உங்களுக் குப் பணிவிடை செய்வதையே எனது பாக்கியமாகக் கருதுகிறேன். -
அத்தி : நீ எனக்கு உயிர் கொடுத்தாய்...உன்னல் தான் நான் பிழைத்தேன். அந்த உதவியொன்று போதாதா? இப்படி அறுபது நாழிகையும் நீ சிரமப்பட வேண்டுமா?
பக்கம்:ஆதி அத்தி.pdf/82
Jump to navigation
Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
