பக்கம்:ஆதி அத்தி.pdf/83

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஆதி அத்தி 83 மருதி; எனக்குச் சிரமமே இல்லை. நீங்கள் ஒரு தொந்தரவும் இல்லாமல் முழு உடல் வலிமையும் பெற்று எழவேண்டும். அதுதான் எனது ஆசை. அத்தி: மருதி, நான் சற்று எழுந்து நடமாடிப் பார்க்கட்டுமா? இப்பொழுது நீ கொடுத்த பால்கஞ்சியை அருந்திய பின் கொஞ்சம் உடம்பிலே தெம்பு ஏற்பட் டிருக்கிறது. மருதி: இன்றைக்கு வேண்டாம். நாளேக்கு அந்தச் சோதனையை வைத்துக்கொள்ளலாம். நேற்று மாதிரி எழுந்து நின்று விழுந்துவிடப் போகிறீர்கள். அத்தி (சிரித்து): ஆமாம், நேற்று என்னை நீ பிடித் துக் கொள்ளாமலிருந்தால் நான் அப்படியே தரையில் தடாலென்று விழுந்திருப்பேன். என்னைத் தாங்கிப் பிடிக்கக் கூடிய வலிமை உனது பூங்கொடி போன்ற உடம்புக்கு எங்கிருந்து கிடைத்ததோ தெரியவில்லை. அது எனக்கு இன்னும் ஆச்சரியமாக இருக்கிறது. மருதி (மகிழ்ச்சியோடு): இப்பொழுது நினைத்தால் எனக்கும் ஆச்சரியமாகத்தான் இருக்கிறது. ஆனால் அந் தச் சமயத்திலே எப்படியாவது உங்களைக் கீழே விழாமல் செய்யவேண்டுமென்ற ஒரே எண்ணந்தான் என் உள் ளத்திலே இருந்தது. அத்தி (சிரித்துக் கொண்டே): உனது வலிமையை மறுபடியும் சோதித்துப் பார்ப்பதற்காவது இப்பொழுது எழுந்து நடக்கலாமென்று தோன்றுகிறது. மருதி: ஐயோ, வேண்டாம். நீங்கள் அப்படியே சற்று உறங்குங்கள். உறக்கந்தான் உடம்புக்கு விரை விலே வலிமை கொடுக்கும்...நான் பாடட்டுமா?

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஆதி_அத்தி.pdf/83&oldid=742475" இருந்து மீள்விக்கப்பட்டது