பக்கம்:ஆதி அத்தி.pdf/85

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஆதி அத்தி 85 அத்தி: மருதீ, நான் உயிரோடிருப்பதைப் பற்றி அவர்களுக்குச் சேதி அனுப்பவேண்டும், என்னைக் காணுமல் எல்லோரும் வருந்திக் கொண்டிருப்பார்கள். மருதி: தாங்கள் யாரென்றே இன்னும் கூறவில்லை. எப்படிச் சேதி அனுப்புவது? யாருக்குச் சேதி அனுப்ப வேண்டும்? அத்தி: உனக்கு நான் யாரென்று இன்னும் தெரி யாதா? ஆமாம்-(யோசனையோடு) இந்த நான்கு நாட் களாக யாருமே என்னைத் தேடிக்கொண்டு வரவில்லையா? மருதி: இந்தப் பக்கத்திலே யாருமே வரக்காணுேம், ஒருவேளை வந்திருப்பார்கள். எங்கள் கண்ணிலே பட வில்லை. அத்தி: இந்தப் பக்கத்திலே வந்திருந்தால் உங்களைப் பார்த்துக் கேட்காமலா இருப்பார்கள்? சோழ நாட்டிலே என்னைத் தேடுவதற்குக்கூட ஆட்கள் இல்லையா? ஒரு வேளை நான் வெள்ளத்திலே போனதைப்பற்றி யாருமே அதிகம் கவலைப்படவில்லையோ என்னவோ? மருதி: அப்படி இருக்குமா? அவர்கள் எங்கே தேடி அலைகிருர்களோ-என்ன துன்பப்படுகிருர்களோ-உங்க ளுக்கு மனைவியிருந்தால்...... அத்தி (கொஞ்சம் வெறுப்போடு) எனக்கு மனை வியா? மனைவியிருந்தால் அவளுக்காகவாவது என்னை இதற் குள்ளே தேடிக் கொண்டு வந்திருக்க மாட்டார்களா? சோழநாடு முழுவதும் என்னைத் தேடுவதிலே ஈடுபட் டிருக்க வேணுமே? மருதி: தங்களுடைய வரலாற்றைக் கூறினால் நான் சேதி அனுப்புகிறேன். எனக்கும் தாங்கள் யாரென்று தெரிந்துகொள்ள ஒரே ஆவலாக இருக்கிறது

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஆதி_அத்தி.pdf/85&oldid=742477" இருந்து மீள்விக்கப்பட்டது