பக்கம்:ஆதி அத்தி.pdf/86

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஆதி அத்தி &f காட்சி மூன்று (அதே மாலை நேரம். மனங் குழம்பி வர்டுகின்ற ஆதிமந்தி காவிரிக்கரையோரமாக வந்து கொண்டிருக்கிருள். மனம் கலங்கியிருக்கிற தென்பது அவளுடைய பார்வையிலே தெரி கின்றது. எதையோ பார்த்துச் சிரித்துக் கொள்ளுகிருள். தொடர்பில்லாமல் பேசு கிருள்.) ஆதிமந்தி: சேர நாட்டு மலேயருவியா இது......? காவிரி சாந்தமானவளாயிற்றே......? அவள் எனக்குத் தாயல்லவா?......ஆட்டனத்தி, நான் ஆடிக்கொண்டே இருக்கட்டுமா?...இந்த அனிச்சப்பூ உங்களுக்குப் பிடிக் காதா? என்னைப் பார்த்தால் அழகாயில்லையா...! (எதையோ ஏறிட்டுப் பார்க்கிருள். காவிரியின் பக்கம் அவள் பார்வை செல்லுகிறது. முகத் திலே சோகம் படர்கிறது......தேம்பி அழு கிருள்......பிறகு பாடத் தொடங்குகிருள்.1 (பாட்டு) பல்லவி தேடித்தேடி அலைந்தேனே சேரமன்ன ஆட்டனத்தி...... (தேடித்தேடி) அனுபல்லவி ஆடிமாத வெள்ளம் ஆடவந்த நாதா ஆதி உள்ளம் நொந்தே அழைத்தேன் இங்கு வாரீர் (தேடித்தேடி) (அனுபல்லவியைப் பாடிப் பிறகு பல்லவியைப் பாடிக்கொண்டே மறைகிருள். சற்று நேரம் அவளுடைய சோகப் பாட்டுக் கேட்டு, மெது வாக மங்குகிறது. முன்பே சந்தித்த மூன்று பெண்கள் வருகிருர்கள்.) -

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஆதி_அத்தி.pdf/86&oldid=742478" இலிருந்து மீள்விக்கப்பட்டது