பக்கம்:ஆதி அத்தி.pdf/88

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஆதி அத்தி 89 மூன்ரும் பெண் நேற்றிரவு ஒரு நாணற்புதரிலே இளவரசி படுத்திருந்ததை நினைத்தாலே எனக்கு பயமாக இருக்கிறது. அந்தப் புதரிலெல்லாம் பாம்புகள் நிறைய இருக்குமாமே?... (போகிரு.ர்கள்.) திரை காட்சி நான்கு (மருதியின் இல்லம். ஆட்டனத்தி ஒரு சாய்வான தரையிலே ஊன்றிக்கொண்டிருக்கிருன். பக்கத் திலே அழகின் வடிவாக மருதி நிற்கிருள். மாலை நேரம்.) அத்தி: நான் இங்கு வந்து பல நாட்களாகி விட்டன. உடம்பும் சரியாகி விட்டது...இனி நான் புறப்பட வேண்டாமா? மருதி: இன்னும் உங்கள் கால்கள் ஒவ்வொரு சம யத்திலே தள்ளாடுகின்றனவே? கையுங்கூடச் சில சமயங் களிலே தானுக நடுங்குகிறது... அத்தி: இருந்தாலும் இனி ஒன்றும் என் உடம் பைப் பற்றிக் கவலையில்லை... நான் நாளைக் காலையில்... மருதி (சட்டென்று இடைமறித்து): ஏன்; அடி யாளின் பணிவிடையில் ஏதேனும் குறை ஏற்பட் டிருக்கிறதா? அத்தி: மருதி, உனது அன்பிலே நான் திளைத்துப் போயிருக்கிறேன். கண்ணே இமை காப்பது போல என்னை நீ காத்து வருகிருய்... உன் அன்பையும் உனது ஆடல் பாடலின் அருமையையும் நினைத்தால் உலகத்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஆதி_அத்தி.pdf/88&oldid=742480" இலிருந்து மீள்விக்கப்பட்டது