பக்கம்:ஆதி அத்தி.pdf/89

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

90 ஆதி அத்தி தையே மறந்துவிட்டு இங்கேயே இருந்துவிடலாம் என்று எனக்குத் தோன்றுகிறது. ஆல்ை... மருதி (மகிழ்ச்சியோடு): இங்கேயே நீங்கள் தங்கி விடுங்கள்...நான் தங்களுக்குச் சதா பணிவிடை செய்து கொண்டிருக்கும்படியான பாக்கியத்தை எ ன க் கு க் கொடுங்கள். அத்தி: மருதி, இப்படிப் பேசாதே, நீ இப்படிப் பேசும்போது என் மனம் தடுமாறுகிறது......காவிரி வெள்ளத்தை எதிர்த்துப் போராடிப் போராடி, உடலும் உள்ளமும் தளர்ந்து கிடக்கிற இந்த நிலையிலே நான் எதையும் தெளிவாகச் சிந்திக்க முடியவில்லை..... உனது அன்பு காவிரி வெள்ளத்தைவிட அதிகமாக என் உள்ளத் திலே மோதுகிறது. மருதி: பார்த்தீர்களா...? உங்கள் உடம்பு இன்னும் தளர்ந்திருக்கிற தென்று நீங்களே ஒப்புக்கொள்கிறீர்கள். இந்த நிலையிலே நாளைக்குப் புறப்பட நினைப்பது சரியா? அத்தி: நாளைக்கு இல்லாவிட்டாலும் வேருெரு நாளைக்கு நான் புறப்படத்தானே வேணும்...? எவ்வளவு விரைவாக நான்புறப்படுகிறேனே அவ்வளவுக்கும் நல்லது என்று நான் சில சமயங்களிலே நினைக்கிறேன். மருதி. நீங்கள் என்ைேடு இருக்கிற ஒவ்வொரு நாளும் எனக்குச் சொர்க்க வாழ்க்கையாக இருக்கும்... அதை ஏன் விரைவிலே பிடுங்கிக்கொண்டு என்னை நகரத் திலே தள்ள நினைக்கிறீர்கள்?... அத்தி: மருதி, நான் புறப்பட்டுப் போவதைப்பற்றி நீ இப்பொழுது நினைக்க வேண்டாம்...அதை நினைக்கிற போதே நீ நரகவேதனை அனுபவிப்பதாக எனக்குத் தோன்றுகிறது...இருந்தாலும் நான் போகக் கடமைப்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஆதி_அத்தி.pdf/89&oldid=742481" இலிருந்து மீள்விக்கப்பட்டது