பக்கம்:ஆதி அத்தி.pdf/90

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


ஆதி அத்தி 9] பட்டவன். வா...இப்பொழுது எதாவது ஒரு பாடலுக்கு அபிநயம் பிடிக்கிருயா?...இந்த உலகத்தை மறந்து இந்த நாழியிலாவது ஆடலிலே மகிழ்ந்திருப்போம் ...வா. (மருதி மகிழ்ச்சியோடு ஆடத் தொடங்குகிருள்.) (பாட்டு) பல்லவி எங்கிருந்தோ வந்தார்-அவர் என்ற னுள்ளம் புகுந்து கொண்டார் -(எங்கிருந்தோ) அனுபல்லவி பொங்கும் இன்பம் கண்டேன் புதுமை வாழ்வும் கண்டேன் தங்கும் இவ்வின்பம் அன்றி மங்குமோ உயிர் வாடுமோ -(எங்கிருந்தோ) சரனம் நெஞ்சம் வெந்துவாட நினைவும் மாறியோட பஞ்சுபோல ருைந்தேன் பரிவு கொள்ளுவாரோ தஞ்சம் என்ற போதும் தள்ளுவாரோ நானும் சாமி உள்ளம் அறியேன் தளர்ந்து வாடுகின்றேன் -(எங்கிருந்தோ) (மெய்மறந்து ஆட்டனத்தி ஆடலில் மூழ்கியிருக் கிருன். ஆடல் முடிந்ததும் பேசுகிருன்.) அத்தி: மருதி-உனது பாடலால் என் நெஞ்சைக் கலக்குகிருய்,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஆதி_அத்தி.pdf/90&oldid=742483" இருந்து மீள்விக்கப்பட்டது