99. ஆதி அத்தி மருதி: பாடல் நெஞ்சைக் கலக்குகிறதா? அது உங்களுக்குப் பிடிக்கவில்லையா? எனது ஆடலும் பிடிக்க வில்லையா? அத்தி: பிடிக்கவில்லை என்று சொல்லுவேன? இவ் வளவு அற்புதமான ஆடலை நான் கண்டதே இல்லை. ஆடலிலே அந்தச் சேரநாட்டு இளவரசன் ஆட்டனத்தி மிகத் தேர்ந்தவன் என்று கூறுவார்கள். அவனுங்கூட இத்தனை உணர்ச்சி காட்டி அழகாக ஆட முடியாது... மருதி: ஆட்டனத்திக்கு இந்த ஆடல் பிடிக்கு மென்று நினைக்கிறீர்களா? அத்தி: இந்த ஆடலிலே அவன் எல்லாவற்றையும் மறந்து விட்டு இதிலேயே மூழ்கிவிடுவானே! இப்படி உயர்ந்த நாட்டியத்தை அவன் பார்க்கக் கொடுத்து வைத்திருக்க வேண்டும். மருதி (மிகுந்த பூரிப்போடு): ஆட்டனத்தி மகிழ் வதைவிட இன்று நீங்கள் பார்த்து மகிழ்வதையே நான் பெரிதாக மதிக்கிறேன். அத்தி: நான...? மருதி: ஆமாம் உங்களைவிட ஆட்டனத்தி எனக்குப் பெரிதில்லை. அத்தி (தன்னையே மறந்து, எழுந்து கொஞ்சம் தள்ளாடி இரண்டு எட்டு வைத்து): மருதி...(அவள் பக்கம் கையை உணர்ச்சியோடு நீட்டுகிருன்...எனக்கு என்ன செய்வது...என்ன பேசுவதென்று தெரியவில்லை... (மருதி அவன் பக்கமாக அடியெடுத்து வைத்து ஆசையோடு அவன் முகத்தைப் பார்க்கிருள். அவன் கரம் அவள் முகத்தைத் தீண்டுகிறது. மெதுவாகத் தோளின் பக்கம் வருகிறது. சட் டென்று அத்தி கையை எடுத்துக்கொள்ளு கிருள்.)
பக்கம்:ஆதி அத்தி.pdf/91
Appearance