பக்கம்:ஆதி அத்தி.pdf/94

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஆதி அத்தி 95 பொன்னி: மருதி, எங்கே காலை நேரத்திலே இத் தன அவசரம்? மருதி (சட்டென்று திரும்பிப் பொன்னியைப் つ பார்த்து): பொன்னி-நீயா.....! பொன்னி. ஆமாம் நான்தான், என்னை நினைப் பிருக்கிறதா? நேற்று மாலையிலிருந்து நானிருப்பதையே மறந்துவிட்டாயே? மருதி: இல்லை பொன்னி. இன்றைக்கு எனக்கு முக்கியமான நாளல்லவா? பொன்னி: அதென்ன திடீரென்று அப்படி முக்கிய மான நாள்...? வஞ்சி நாட்டிற்குப் போவதற்கு இன்னும் உன் தந்தை வரவில்லையே? மருதி: வஞ்சிநாடா? இனிமேல் அங்கே நான் எதற்குப் போகவேனும்? அவர்தான் இனிமேல் இங் கேயே இருந்துவிடுவதாக நினைத்துக் கொண்டிருக் கிருரே?... பொன்னி: அது யார் அவர்? மருதி; அவர் யாராயிருந்தால் எனக்கென்ன பொன் னி?-அவர் இருந்தால் போதும்... பொன்னி பிறகு ஆட்டனத்தியின் முன்னே ஆடிப் பரிசு வாங்க வேண்டுமென்ற ஆசையெல்லாம் காற்றிலே போய்விட்டதா? இதற்காகவா என்னை இங்கே இத்தனை நாட்களாகச் சிறை வைத்தாய்? மருதி (சிரித்து); பொன்னி, உனக்கொன்றுமே தெரிவதில்லை. ஆட்டனத்தியின் பரிசு கிடைத்தால்... தேன் சுவையாக இருந்தாலும் அமுதம் கிடைக்கிற போது தேனை யார் நினைப்பார்கள்?

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஆதி_அத்தி.pdf/94&oldid=742487" இலிருந்து மீள்விக்கப்பட்டது