பக்கம்:ஆதி அத்தி.pdf/95

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

96 ஆதி அத்தி பொன்னி: ஆமாம். இப்போ எங்கே அவசரமாகப் புறப்பட்டாய்? மருதி; அவர் தனியாகக் கொஞ்ச நேரம் சிந்தனை செய்ய வேனுமாம்...அப்புறம் என்ளுேடு எல்லாம் பேசப் போகிரு.ர். அதுவரையிலும் எனக்கு இங்கே இருக்கை கொள்ளவில்லை. காவிரியும் கடலும் கூடுகின்ற இடத் திலே போய் அந்தக் கடல் அலைகளோடு கூத்தாட வேண்டும் போலிருக்கிறது. அப்பொழுதுதான் என் உள்ளத் துடிப்புக் கொஞ்சம் சாந்தமாகும்...நான் போய் வரட்டுமா? (புறப்பட எத்தனிக்கின்ருள்.) பொன்னி: நானும் கூட வரட்டுமா? மருதி: நீ எதற்குப் பொன்னி.வந்தால் ஏதாவது பேசிக்கொண்டே இருப்பாய்...என் உள்ளத்தோடு நான் சேர்ந்து துள்ளிக் குதிக்க முடியாது...நீ அவருக்குக் காலை உணவை ஆயத்தம் செய்கிருயா?... (பேசிக்கொண்டே வேகமாகப் ேபா கி ரு ள். பொன்னி யோசனையோடும் புன்முறுவலோடும் அவளேப் பார்த்துக்கொண்டு நிற்கிருள்.) பொன்னி: கொதல் கிடைத்துவிட்டால் பெண் களுக்கு வேறென்ன வேண்டும்?-அது கிடைக்கா விட்டால்தான் வாழ்க்கையே இருளாய் விடுகிறது. (ஆழ்ந்த சிந்தனையோடு நிற்கிருள்.) இருந்தாலும் மருதிக்கு இத்தனை பயித்தியம் ஆகாது. அவரை யாரென்றே தெரிந்துகொள்ளவில் லையே? இப்பொழுதுகூட அவளுக்குத் தெரியாது. (மறுபடியும் யோசனையில் ஆழ்கிருள்.)

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஆதி_அத்தி.pdf/95&oldid=742488" இலிருந்து மீள்விக்கப்பட்டது