பக்கம்:ஆதி அத்தி.pdf/98

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

I06 ஆதி அத்தி ஆதிமந்தி: அவர் இந்தக் கடல்மேல்தானே போயி ருப்பார்? அவர் கிடைக்காமல் போகமாட்டார்...நானும் கடல்மேலே சென்று அவர் இருக்குமிடத்திற்கே போய் அவரைக் கண்டு பிடிப்பேன்...கல்விலும் முள்ளிலுமாக நடந்த என் கால்களுக்குக் கடல் நீர் எவ்வளவோ மெது வாக இருக்கும்-ஆளுல்...நான் உங்களையே நம்பியிருக் கிறேன். தாயே, உங்கள் முகத்தைப் பார்த்தால் தெய்வம் போலிருக்கிறதே...நீங்கள் துரோகம் செய் வீர்களா? செய்யவே மாட்டீர்கள்... (மருதி துடிதுடிக்கிருள். அவள் உள்ளத்திலே ஒரு பெரிய போராட்டம் நடைபெறுகிறது.) மருதி: இது என்ன பேதலித்த மனம் பேசுகிற பேச்சா?...ஆமாம்-அவருக்கு மனம் பேதலித்திருக் கிறது. அவர் மனம் இனிச் சரியாகுமா? ஆதிமந்திக்கா... ஆட்டனத்தி...? எனது ஆட்டனத்தி...ஐயோ முடியாது முடியாது...(விம்முகிருள்...தடுமாறுகிருள்...) ساساييه னத்தி...எனது உள்ளக் கோயிலிலே வந்து புகுந்து கொண்ட தெய்வம்...ஆட்டனத்தி...! ஆதிமந்தி: ஆட்டனத்தி-ஆமாம் அவரைத்தான் கேட்கிறேன்...எனது உயிர் அவர்தானே-அவரில்லாமல் நான் வாழ முடியுமா? மருதி: ; ஐயோ அவரில்லாது நான் வாழ முடியுமா? (வெம்பித் துடிக்கிருள்)...முடியாது...முடியாது" இது யார் இது? எனது உயிரைப் பறித்துப்போக வந்திருக் கிறது?...அது என் உயிரா?... ஆதிமந்தி: தாயே, அவர் எனது காதல் தெய்வம். . அவரைக் கொடுத்துவிடுங்கள்...நீங்களும் ஒரு பெண் னல்லவா? நான் படுகிற துன்பமெல்லாம் தங்களுக்குத் தெரியாதா? அவரை மறுபடியும் பார்ப்பேனென்ற ஒரே

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஆதி_அத்தி.pdf/98&oldid=742491" இலிருந்து மீள்விக்கப்பட்டது