பக்கம்:ஆதி அத்தி.pdf/99

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஆதி அத்தி Ꭵ0 I நம்பிக்கையாலே என் உள்ளம் இன்னும் வெடித்துப் போகாமலிருக்கிறது... மருதி : ஐயோ, என்னேக் கொல்வதைப் போல நீங்கள் பேசுகிறீர்கள்...... என்னை நீங்கள் தெரிந்து கொள்ளவே இல்லை... நா. மருதி...நான் சாதாரண மான பெண்...இல்லை...இல்லை... ஆம் நான் சாதாரண மான-பெண்தான்-எனக்கு உங் க ள் கணவனைத் தெரியாது-வேண்டுமானல் அந்தக் காவிரியையே கேளுங்கள்...நான்...வருகிறேன்... (பெரு முயற்சியோடு இவ்வாறு கூறி அங்கிருந்து வீட்டை நோக்கி ஓடுகிருள். ஒடியவள் சட் டென்று சற்றுத் துாரத்தில் தயங்கி நிற்கிருள். ஆதிமந்தி மீண்டும் பாடிக்கொண்டு கடலே நோக்கிப் போவதைக் காண்கிருள்.) ஆதிமந்தி: (பாட்டு) கடலலையே என் கணவரெங்கே? காவிரியே என் கணவரெங்கே? (பாடிக்கொண்டே கடலை நோக்கி விரைந்து செல்லு கிருள். மருதி உள்ளம் தடுமாறுகிறது.) மருதி : இந்த அரசகுமாரிக்கு நான துரோகம் செய்வது? ஐயோ அவள் உள்ளம் எப்படியெல்லாம் துடிக்கிறதோ... அவள் கடலிலே விழுந்துவிட்டால்... (பயந்து நடுங்குகிருள்) அவளைப் பலி கொடுத்துவிட்டு எனக்கு வாழ்வா?...இன்பமா...? என்னைப்போல அவ ளும் ஒரு பெண்தானே...? அவர் அவள் கணவன் தானே...? என்னவானுலும் அவளுக்குத் துரோகம் செய்ய மாட்டேன்... (திரும்பி ஆதிமந்தியை நோக்கி வேகமாக ஒடு கிருள். ஆதிமந்தி கடலை அணுகுவது தெரி கிறது.)

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஆதி_அத்தி.pdf/99&oldid=742492" இருந்து மீள்விக்கப்பட்டது