பக்கம்:ஆதி திராவிடர் பூர்வ சரித்திரம்.djvu/16

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

13

யின் கணவாயிலிருந்த சில ஆரியர்களுக்கு “ மிலேச்சர்” என்று பெயரிடப்பட்டிருக்கிறது. மேலும் ஆரியருக்கு “சுரர்” என்கிற ஒரு பெயர் உண்டு. அதன் பொருள் "சுரா” சமமந்தமுடையவர் எனப் புலப்படுகிறது “சுரா" என்பது கள், மது என பலபொருள் குறித்த ஒரு மொழி யாதலால் சுரர் என்பதற்கு கள் குடியா என்பதே பொரு ளாம் இவ்வாரியர்கள் குதிரை ஆடு மாடு முதலியவைகளை தின்பதுடன் சோமபான மென்னுப கட்குடித்தலுமுடைய வராதலினால், வைதிக கிரியை என்று யாகங்கள் செய்வதும், அவற்றுள் ஆடு மாடு அசுவமாதிய இவைகளை பலியிட்டு புசிப்பதுமன்றி புருஷமேத யாகமென மனிதரையும் பலியிட்டு தின்றுவந்தார்கள். இதனாலேதான ஆரியருக்கு ஆதி காலத்தில மிலேச்சர் என்றும் சுரா என்றும் பூர்வகால நூலாசிரியர்கள் கூறியிருக்கின்றனர். மேலும் தமிழகத்தில முதல் முதல் வரும்போது ஸ்தமபத்தின்பேரி லாடுபவர்களாகவும் வந்தார்கள் - ஆகையினால் தமிழர்கள் அவர்களை தொம்பரென்றும் ஜாலவித்தைக்காரர்களென்றும் நினைத்தார்கள். “ஆரியக் கூத்தாயினும் காரியத்தின்பேரில் கண்ணாயிரு” என்கிற பழமொழியில் நாளைவரையில் ஆரியக்கூத்து என்கிற பதம் தமிழிலிருக்கிறது. மேலும் இன்னொருபதமாகிய “ஆரியப்பாவை” என்பது ஆரியர்கள் தமிழ்நாட்டில் ஆட்டக்காரர்களாக திரிந்துகொண் டிருந்தார்களென்பதை நியாபகப்படுத்துகிறது.இவ்விதமாக ஆரியரில் சிலரிருந்தபோதிலும் அவர்கள் மொத்தத்தில் அறிவுள்ளவர்களாகவும் நாகரீகமுடையவர்களாகவே இருந்தார்களென்று ஏற்படுகிறது. இவ்வாரியா தமிழகம் வந்து சேர்ந்து சுமார் 400, 500 வருஷங்களுக்கு பின்னர் எழுதப்பட்ட தொல்காப்பியத்தில் பொருளதிகாரம் 502-வது பாடலில் அடியில்வருமாறு ஆரியரை தாழ்மையாக கூறியிருக்கிறது.