பக்கம்:ஆதி திராவிடர் பூர்வ சரித்திரம்.djvu/34

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

31


பெத்தபோயஜாதி முதலிய ஜாதிகளுக்கும் ஆங்கிலேயருக்கும் மரியாதை யிருக்கிறது. நீங்கள் கல்வியில்லாமல் ஏழ்மை தனத்தி லிருப்பதால்தான் இவ்வித கஷ்டங்கள் நேரிடுகிறது. உங்கள் ஏழ்மைத்தனத்தை நீக்கவும், செல்வமுள்ளவர்க ளாகவும், சிறந்த கல்விமான்களாகவும் நீங்கள் ஆனால் உங்க ளுக்கு மேன்மைதானே உண்டாகிறது. நீங்கள் ஏழைகளா யிருந்தாலும் நன்னடக்கை யுள்ளவர்களே என்பதற்கு ஐயமிலலை. 500 ரூபாய் மாதம் சமபளமுள்ள ஓர் பிராமண உத்தியோகஸ்தன் லஞ்சம் வாங்கினாலும் ஒரு ரூபாய். சம்பளமுள்ள கிராம ஆதி - திராவிட தலையாரி தன்னிடம் மணியகார் குடுத்த ஆயிரம் ரூபாய் சர்க்காா பணத்தை ஒரு பிசகு மில்லாமல் தாலூக்கா கசசேரியில் யோக்கியமாய் கொண்டு வந்து கட்டுகிறான் இந்துமதத்தில் இத்தியாதி சங்கடங்களிருக்க நீங்கள் என் அம்மதத்தி லிருக்கவேண்டும் உங்கள் பூர்வீக மதமாகிய பௌத்த மதத்தில் சேருதல் நலமன்றோ . அல்லது மற்ற உயாநதஜாதி என்கிற இந்துக்களில் படித்தவர் கள் ஏற்றுக்கொண்ட பிரம சமாஜததை நீங்கள் ஏற்றுக் கொள்ள ஆக்ஷேபணை என்ன? இவைகளை யோசித்துபாருங்கள். ஆங்கிலேயே அரசாட்சியில் எல்லாரும் சமம் அப்படி யிருக்க உங்களிட சமபாத்தியததை அனுபவிக்க ஒட்டாமல் யாராவது செய்தால் அதை விட்டுவிடக் கூடாது. உங்கள் பாத் தியதைகளை நிலைநாட்டுங்கள் ஓமரூல் காரருடன் சேராதீர் கள், ஆங்கிலேயர் உங்கள் கையினால் செய்யப்பட்ட சாப் பாட்டை சாப்பிட்டு அவர்கள் உங்களை சகோதரர்களாக நினைக்கிறார்கள் அவர்கள் வந்தபிறகுதான் உங்களுக்கு மேன்மை உண்டாகிவருகிறது. நீங்கள் மேல் நிலமைக்கு வருகிறதை அவர்கள் காலத்தில் அதை கெடுக்க யாராலும் முடியாது. ஓமரூல் வந்துவிட்டால் உங்கள் கதியும் மற்ற திராவிடர் கதியும் அதோகதிதான். புத்தமார்க்கம் சென்ற