32
பிறகு பிராமணர்கள் மறுபடியும் ஜாதி வித்தியாசங்களை
அதிக கடூரமாய் ஏற்படுத்தி திராவிடர்களை இம்சிக்கலாயி
னார். அதிலும் ஆதி திராவிடர்களாகிய உங்களை வெகு ஈனஸ்திதியில் கொண்டு வந்து வைத்தார். அந்தஸ்திதி
யில் ஆங்கிலேயர் இத்தேசம் வருகிறவரையில் நீங்கள் இருக
தீர்கள். இப்பொழுது அவர்களை எதிர்தது மேலே வருகி
றீர்கள். நீங்கள் மாததிரமல்ல மற்ற திராவிடர்களும் அவர்கள் பிடிப்பிலிருந்து வெளிப்பட்டு வருகிறாகள். அப்படி
தங்கள் பாதத்தடியிலிருந்து திராவிடர் தப்பி ஓடாதபடி,
அவர்களை விர்ததிக்கு கொண்டுவந்தவர்களும் எல்லாரையும்
சமமாக நடத்தும் ஆங்கிலேயரைத் துரத்திவிட்டு தாங்கள்
மறுபடியும் திராவிடராகிய நம்மை காலடியில் நசுக்கவேண்டு
மென்று பிராமணர் சுய ஆட்சி கேட்கிறாகள். அதற்கு
நீங்கள் கொஞ்சமேனும் இடந்தரலாகாது. உங்களால் ஆன
வரையில் சுய ஆட்சி தற்காலம் கூடாதென்று எதிர்த்து
நிற்கவேண்டும். சுயஆட்சி வேண்டுமென்கிற வாயிலேயே
வர்னாசிறம தர்மததை நிலைநாட்ட வேண்டுமென்கிறர்கள்
இப்பிராமணர்கள். ஓர் பிராமண பைஸ்வா அரசாட்சியில்
பறையர் எனபோா வெளியில் வந்தால் அவாகள் தங்கள்
கழுத்தில் சட்டியை மாட்டி கொண்டும் இடுப்பில் துடப்
பத்தை கட்டிக்கொண்டும் வரவேண்டியதா யிருந்தது.
ஆகையால் பிராமண அரசாட்சி வேண்டாம். நன்றாய்
யோசித்து பாருங்கள்.
PRINTED AT THE G. R. C. PRESS, MADRAS-9-'20-1000.