பக்கம்:ஆதி திராவிடர் பூர்வ சரித்திரம்.djvu/4

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

ஆதி திராவிடர்


பூர்வ சரித்திரம்

வங்காள ராஜதானியின் மேற்கு அறைபாக வடங்களிலிருந்து கன்னியாகுமரி வரையிலுள்ள பாகங்களிலும், இலங்கைதீவிலும் பெலுசிஸ்தான் தேசத்திலும் கலப்பற்ற திராவிடர்கள் இருக்கிறார்கள். அவர்கள் மொத்தம் பதினோரு கோடியே முப்பதுலட்சம் ஜனங்கள்.இதைத்தவிர கலப்புற்ற திராவிடர்கள் இந்தியாவில் சுமார் பத்துகோடி ஜனங்களிருக்கிறார்கள். மகமதயர் ஆறுகோடி இந்தியாவிலிருக்கிறார்கள். இவர்கள் மங்கோலிய தூகி நாட்டாரின் வம்சம ஆகையால் இந்தியாவிலுள்ள சுமார் முப்பது கோடி ஜனத்தில் கலப்பற்ற ஆரியர்கள் மூன்றுகோடி தான் என்கிறார்கள். தமிழ், தெலுங்கு மலையாளம், கன்னடம், துளுவம், கொச்சி, காண்டு, தோடா, கோட்டா, ராஜமகால், உரேயான், பிராஉளுஇ முதலிய பன்னிரண்டு பாஷைகளும் திராவிட பாஷைகள்.

இத்திராவிடர் இந்தியாவின் பூர்வக்குடிகள். ஆரியர் பின்னிட்டு வந்தவர்கள். திராவிடர் ஆதியில் யூபிரடீஸ், டைக்ரிஸ் நதிகளின் மத்தியிலுள்ள "ஏலம்" நாட்டிலிருந்து இத்தேசம் வந்தார்களென்று சிலர் சொல்லுகிறார்கள். வேறு சிலர் இந்தியாவின் தெற்கிலிருந்தும் கடல் கொள்ளப்பட்டதமான "இலேமூரியா" கண்டத்திலிருந்து வந்தவர்களென்றும் சொல்லுகிறார்கள். வேறு சிலர் ஆரியர் இந்தியாவிற்கு பின்னிட்டு வந்தவழியாகவே இவர்களும் வந்து நியுஜீலண்டு