பக்கம்:ஆதி திராவிடர் பூர்வ சரித்திரம்.djvu/5

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்தப் பக்கம் சரிபார்க்கப்பட்டது.

வரையில் பரவியிருந்த இந்தியாவின் தென்பாகத்தில் குடியேரினர் என்கிறார்கள். வேறு சிலர் திராவிடர் மத்திய ஆசியாவி லிருந்தவர்களென்றும், சிலர் இமயகிரி மூலமாய் இந்தியாவின் வடகிழக்கு கணவாய் வழியாய் இத்தேசத்துக்கு வந்தனர் என்கிறார்கள். திராவிடர் இந்தியாவின் ஆதிகுடிகளே என்பாரும் உளர். இவைகளிலெல்லாம் கொஞ்சம் கொஞ்சம் உண்மை இருக்குமென்றே தோன்றுகிறது.

1800 வருஷங்களுக்கு முன்னிருந்த தமிழர் என்னும் நூலில் ஸ்ரீமான் கனகசபை என்பவர் இந்தியாவின் பூர்வகுடிகள் வில்லவர், மீனவர் என்றும், மத்திய ஆசியாவிலிருந்து வந்த நாகர்களால் இவர்கள் ஜெயிக்கப்பட்டார்களென்றும் தேவ நாகரி என்கிற பாஷைகளின் எழுத்துகளை நாகரிடம் ஆரியர் கற்றுக்கொண்டார்களென்றும் சொல்லுகிறார் மேலும் தமிழ் சங்க நூல்களில் கூறப்படும் மறவர், எயினர், ஒலியர், ஓவியர், அருவளர், பரத்துவர் முதலியோர் மேல்கூறிய நாகவமிசத்தார் என்றும் கூறுகின்றார். பின்னிட்டு இந்நாகர்கள் மங்கோலியாவிலிருந்து வந்த தம்ர்லிடி அல்லது தமிழர்களால் ஜெயிக்கப்பட்டார்களென்றும் சொல்லுகிறார். மேலும் இத்தமிழரில் மாரர் என்போர் பாண்டிய ராஜ்ஜியத்தையும், திரையர் சோழராசசியத்தையும், வானவர் சேர ராச்சியத்தையும், கோசர் கொங்குநாட்டையும் ஏற்படுத் தினதாகச் சொல்லுகிறார்.

இந்தியாவின் பூர்வீக குடிகள் கருப்புநிறமுள்ள ஓர் வகை நீக்ரோ ஜாதியார் என்பாரும் உளர். நாகர்களே பூர்வ குடிகள் என்று சொல்பவரும் உளர். வேறு சிலர் அம்மாதிரி கருப்புநிறமுள்ள பூர்வகுடிக ளிருந்திருந்தாலும் அவர்கள் நாகர்களுடன் விவாகம் முதலியது செய்துகொண்டு கலந்துகொண்டார்கள் என்பதற்கு சந்தேகமில்லை என்கிறார்