பக்கம்:ஆதி திராவிடர் பூர்வ சரித்திரம்.djvu/7

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்தப் பக்கம் சரிபார்க்கப்பட்டது.

டர்கள் கலப்பற்ற திராவிடர்கள் என்றும், காடர் குறும்பர் முதலியவர்கள் பூர்வகுடிகள் என்றும் சொல்லுகிறார்கள்.

தமிழிலக்கண வித்துவான்களும் கூட திராவிட நாட்டிலிருந்தவர்களை மக்கள், தேவர், நரகர் என்றனர். இதில் நரகர் என்பது நாகர், மக்கள் என்பது தமிழ் மக்கள், தேவர் என்பது ஆரிய பிராமணர். நரகர் என்பது நாகர் என்கிற பூர்வகுடிகன். காடுகளிலும் தாழ்ந்த நிலங்களிலும் விளங்காத இடங்களிலும் (நரகம்) இருந்த பூர்வகுடிகளுக்கு நாகர் என்றும் பெயர். மேற்குறியவைகளால் திராவிடர் என்பது ஆதிகுடிகள் - நாகர் - தமிழர் என்கிற மூவகை ஜனங்கள் ஒன்று பட்டபிறகு உண்டான பெயர் ஆதிகுடிகள் இல்லை என்று ஏற்பட்டால், நாகரும் தமிழரும் சேந்து திராவிட ராயினர்.

மணிமேகலை, பத்துப்பாட்டு முதலிய நூல்களில் நாகர்களைப்பற்றி சொல்லியிருக்கிறது. பூர்வீக புத்தமத நூல்களிலும் நாகர் என்கிற பெயர் அடிக்கடிவருகிறது.

சிலப்பதிகாரத்தில் அடியில் கண்டவைகள் காணப்படும்

"நாக நன்னாட்டு நானூறி யோசனை
வியன்பாதலத்து வீழ்ந்து கேடெய்தும்"
"நக்க சாரணர் நாகர் வாழ்மலை"

நாகநாடு என்பது தமிழகத்துக்கு கிழக்கு அல்லது தென்கிழக்கிலிருப்பதாக சொல்லப்பட்டிருக்கிறது. தமிழ் ஜில்லாக்களில் கள்ளர் வேடர்களில் நீலன், நாகன் என்கிற பெயர்களை சாதாரணமாய் காணலாம். கள்ள ஜாதியினராகிய திருமங்கை ஆள்வாருக்கு நீலன் என்பது பெயர். அவர் மலையரசன் ஒருவனுக்கு ஓர் துணிகுடுத்தார் - அதை சிறுபாணாற்றுப்படையில், "நீல நாகன் நல்கிய கலிங்கம்" என்று