பக்கம்:ஆதி திராவிடர் பூர்வ சரித்திரம்.djvu/8

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

கூறப்பட்டிருக்கிறது. கண்ணப்பநாயனார் தகப்பனுக்கு நாகன் என்று பெயர் அவர் ஓர் வேடர். நாகர்கள் வீரர்கள். அநநாகரில் ஒலிநாகன், முகளிநாகன், சங்கநாகன், நீல நாகன் என்று நால்வகை யுண்டு.

மறவர், எயினர், ஒலியர், ஓவியர், அருவலர், பரத்துவர் இவர்கள் நாகவமிசத்தை சேர்ந்தவர். பூர்வீக தமிழ் நூல்களில் மறவன், எயினன் என்கிற வார்த்தைகளை அடிக்கடி காணலாம். அவர்கள் வில்வித்தை தெரிந்தவர்களாகவும், யுத்த வீரர்களாகவுமிருந்தார்கள். பாண்டிய நாட்டில் இப்பொழுது கூட மறவர்களை அதிகமாய் பார்க்கலாம். பூர்வீக காலமுகல எயினர்கள் பல்லவ சோழநாட்டிலிருந்தார்கள். பறையர் என்போர் மேல்குறித்த எயினர் தான். இவர்களை தற்காலத்திலும்கூட வட ஆர்க்காடு, செங்கலப்பட்டு, தஞ்சாவூர் ஜில்லாக்களில் அதிகமாய் காணலாம் இவ்விடங்களில்தான் எயினர் முன்காலத்திலிருந்தது.

கி. பி. இரண்டாவது நூற்றாண்டிலிருந்த மாங்குடி கீலார் எழுதிய ஓர் நூலில் அடியிலகண்ட பாடலிருக்கிறது.

"துடியன் பாணன் பறையன் கடம்பனென், றிநநான் கல்லது குடியுமில்லை (புறநாநூறு) இதில் தான் முதல்முதல் "பறையன்" என்கிறபதம தொழில்பெயராக காணப்படுகிறது இவைகள் எல்லாம் தொழிலைக் காண்பிக்கும் பெயர்கள். இதைத்தவிர 11-வது நூற்றாண்டிலிருந்த ராஜராஜ சோழன் காலம்வரையில் பறையன் என்ற பெயரே தமிழ் நூலிலாவது சாசனங்களிலாவது காணோம். கி.பி. 11-வது நூற்றாண்டில் பறையன் என்பது ஜாதிபெயரானது. டாக்டர் ஒப்பார்ட்துரை, சமிஸ்கிருத பகரியா (மலைநாட்டின்) என்பதிலிருந்து பறையன் என்ற பதம் உண்டானதாக சொல்லுகிறார். பறை அடித்ததால் இவர்களுக்கு பறையர்