பக்கம்:ஆதி திராவிடர் பூர்வ சரித்திரம்.djvu/9

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

என்கிற பெயர் உண்டானது என்றும் சொல்லப்படுகிறது. கி. பி. இரண்டாவது நூற்றாண்டு முதல் 11-வது நூற்றாண்டு வரையில் பறையன் என்பது இந்த அர்த்தத்தைதான் உடை யதாயிருந்தது. பௌத்தமதமும் சமணமதமும் அடங்கியபிறகு பார்ப்பார் ஜாதிளித்தியாசங்களை கடூரமாய் ஏற் படுத்தியபோது இப் பறையரென் போரைப்பிரித்து அவர் களை தாழ்மை படுத்தினர். இந்த விவரங்களை பின்னிட்டு றைபோம்


2.அத்தியாயம்.

"பறையர்” என்போர் ஆதி திராவிடர் எனல்"


திராவிடர் என்போரில் முதல் முதல் இகதேசத்தி லிருந்த பூர்வகுடிகள் ஓர்வித கருப்புநிற ஜாதியார் என்பர். அவர்களிருந்தது சந்தேகமாகவே தோன்றுகிறது பின்னிட்டு வந்தவர்கள் நாகர். இந்நாகவமிசத்தை சேர்ந்த எயினர் வகுப் புக்கு "பறையர்" என்போர் சேர்ந்தபடியினால் இவர்களையே ஆதி திராவிடர் என்பர். அப்படி சொல்லவும் நியாய மிருக்கிறது. ஆயினும் இவர்கள் ஆதி திராவிடர் என்கிற பெயரிட்டுகொண்டால் மற்ற திராவிடர்களுக்கும் இவர்களுக் கும் ஓர் வித்தியாசம் தோன்றும். அவ்வித வித்தியாசத்தை உற்பத்தி செய்யக்கூடாது. தமிழ் நூலில் சிறப்புற்று விளங்கும் ஸ்ரீமான் டி. பொன்னம்பலம்பிள்ளை யவர்கள் "பறையர்" என்போரைப்பற்றி அடியில் குரித்தவாறு ஜஸ்டிஸ் பத்திரிகையில் வரைகின்றனர். "ஆதித்திராவிடர் என்கிற பாத்தியதையைக் கேட்கிற பஞ்சமர்கள் கூறுவது ஏறக் குறைய உண்மைதான். "பஞ்சமன்" என்கிற வார்த்தை யானது தாழ்ந்த ஸ்திதியிலிருந்து நீக்க யாரோ அவ்வார்த்