334
ஆத்மஜோதி
ஸ்ரீ ஆண்டாள் அருள்விருந்து
(ஸ்ரீமத் ஸ்ரீ ரங்கானந்த சுவாமிகள்)
நீளா துங்க ஸ்தனகிரி தடீ ஸுப்தம் உத்போத்யக்ரு
ஷ்ணம்/ பாரார்த்த்யம் ஸ்வம் ச்ருதி சதசிரஸ் ஸித்த்
மத்யா பயன்தீ) ஸ்வோச்சிஷ்டாயாம் ஸ்ரஜி நிகளிதம்
யா பலாத் க்ருத்ய புங்க்தே! கோதா தஸ்யை நம
இதமிதம் பூய ஏவாஸ்து பூய://
(ஸ்ரீ பராசரபட்டர்)
அன்ன வயல் புதுவை ஆண்டாள் அரங்கற்குப்
பன்னு திருப்பாவைப் பல் பதியம் இன்னிசையால்
பாடிக் கொடுத்தாள் நற் பாமாலை, பூமாலை
சூடிக் கொடுத்தாளைச் சொல்.
—(ஸ்ரீ உய்யக் கொண்டார்)
மெய்யன்பர்களே!
இவ்வாண்டு ஆடிமாதம் 5ந்தேதி, ஆடிப்பூரம் என்னும் திருநாள். இன்னிசையால் நற்பாமாலை பாடிக் கொடுத்தவளும், பூமாலை சூடிக்கொடுத்த சுடர்க் கொடியுமான ஸ்ரீ ஆண்டாள் அவதரித்த திருநாள். அழகான தனது குழல் மேல் சூட்டிய கலம்பக மாலையை அழகிய மணவாளனாகிய திருவரங்கப் பெருமானுக்குச் சமர்ப்பித்து மேன்மையடைந்த ஸ்ரீ ஆண்டாள்,-
“சங்கத் தமிழ்மாலை முப்பதும் தப்பாமே
இங்கு இப்பரிசுரைப்பார் ஈரிரண்டு மால் வரைத்தோள்
செங்கண் திருமுகத்துச் செல்வத்திருமாலால்
எங்கும் திருவருள் பெற்று இன்புறுவர்”
என்று சங்கத் தமிழில் நமக்கு அருள் விருந்து அளித்துள்ளாள். திருமாலைப் பணிந்து, திருமாலைப் புனைந்து சாற்றி
”நன்மை தீமைகள் ஒன்றும் அறியேன், நாரணா! என்னும் இத்தனை அல்லால்; புன்மையால் உன்னைப் புள்ளுவம் பேசிப் புகழ்வான் அன்று கண்டாய், திருமாலே! உன்னுமாறு உன்னை ஒன்றும் அறியேன், ஓவாதே நமோ நாரணா!