ஆத்மஜோதி
345
கிராமத்தில் யாராவது செத்துப்போன சமாசாரத்தைப் போல ஒருவரும் அறியாமல் காலோடே போய்விடுகிறது.
ஆனல் கால் எங்கேயோ வேகமாக நடந்து இடித்துக் கொண்டு ஒரு புண்ணை வாங்கிக் கொள்கிறதென்றால், அதற்குத் தனிக் கெளரவம் வந்து விடுகிறது. அநாயாசமாய் நடக்கிறது போய் ஒய்யாரமான நடனம் செய்கிறது. நம் முடைய காலிலே பகவான் கண் வைக்காத தோஷத்தினல் காயம் பட்டு விட்டால் மற்றவர்களுக்கு என்ன வந்தது? அதற்குப் பரிகாரம் செய்வது போல எல்லோருடைய கண் களும் நம்முடைய காலிலே வந்து பதிகின்றன. சிநேகிதர் களில் ஒருவர் பாக்கியில்லாமல் காலைப் பார்த்து விடுகிறார்கள். 'காலிலே என்ன காயம்?” என்று அனுதாபத்தோடு விசாரிக்க ஆரம்பித்து விடுகிறார்கள். நம்மைப் பற்றி, நம் உத்தியோகத்தைப் பற்றி, நமக்கு உளுத்தம் பருப்பு கிடைக்கிறதா இல்லையா என்பதைப் பற்றியெல்லாம் பிறகு தான் கேட்கிறார்கள். முதல் கேள்வி காலைப் பற்றித்தான். அது மட்டுமா? 'ஜாக்கிரதையாக இருங்கள் சார்; பட்ட காலிலே படும்; ஜாக்கிரதையாக இருக்க வேணும்' என்று எச்சரிக்கை வேறு செய்கிறார்கள்.
நாம் அதைக் கேட்டுக் கொண்டு சும்மா இருக்கிறோமா? யாராவது காலைப் பற்றிக் கேட்காமல் நமக்குப் பக்கத்தில் வந்து விட்டால், சார் சார், அப்படியே நில்லுங்கள்; காலை மிதித்து விடாதீர்கள்' என்று பட்ட காலைப்பற்றி விளம்பரம் செய்கின்றோம். வாஸ்தவமாகவே அதன்மேலே ஒரு சிறு துரும்பு படட்டும், ஒரே புயல்தான். துடிதுடித் துப் போகிறோம். ஆயிரந் தடவை பட்ட காவிலே படும்' என்ற பழமொழியை நாமும் சொல்லுகிறோம்; பிறரையும் சொல்லும்படி வைத்து விடுகிறோம்.
சில பத்திரிகைகளில் பிரமுகர்கள் உள்ளூரில் இருந்து வெளியூருக்குப் போனலும், வெளியூரிலிருந்து உள்ளுருக்கு வந்தாலும் அதை ஒரு விசேடச் செய்தியாகப் போடுவார் கள். ஒருவர் எவ்வளவோ பணக்காரராக இருக்கலாம். படித்தவராக இருக்கலாம். முதல் வகுப்பு வண்டியிலேயே போகலாம். ஆனால் அவர் போக்குவரத்தைப் பற்றிப் பத் திரிகைக்காரருக்குக் கவலை இல்லை. ஏதாவது ஒரு பெரிய கமிட்டியில் அங்கத்தினராக வந்து விட்டால் போதும்