உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:ஆத்மஜோதி.pdf/28

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

346

ஆத்மஜோதி



உடனே அவர் பிரயாண விவரம் பத்திரிகையில் இடம் பெற்று விடுகிறது. அவர் எங்கேயாவது துக்கம் விசாரிக் கப் போகலாம்; கல்யாணத்துக்குப் போகலாம். எப்படியானால் என்ன? அவர் ஊரை விட்டுப் போவது பத்திரிகைக் காரர்களுக்கு ஒரு புதிய செய்தியாகி விடுகிறது.

படாத காலுக்கு வராத கெளரவம் பட்ட காலுக்கு இப்படித்தான் வருகிறது. உண்மையிலே கெளரவம், படாத காலுக்குத்தான் இருக்க வேண்டும். வாழ்க்கையில் எத்தனை விதமான துன்பங்கள் வந்தாலும் அலட்சியமாக ஏற்றுக் கொண்டு மனே தைரியத்தோடு புன்னகை பொலியும் முக முடையவனாகி விளங்குந் தீரனையல்லவா நாம் போற்ற வேண்டும்? போகும்போதும் வரும்போதும் கல்லையும் மண்ணையும் மிதித்து மோதி, மரத்தையும் மட்டையையும் திண்டி வேகமாக நடக்குங்காலே அந்த வீரனுக்குச் சமானமாகத் தான் சொல்ல வேண்டும். அதன்மேல் எவ்வளவோ பொருள்கள் படுகின்றன. ஆனால் அதைப் பிரமாதப்படுத்திக் கொள்ள அதற்குத் தெரிவதில்லை. . -

ஆகவே, பட்ட காலிலே படும்' என்ற பழமொழி யோடு படாத காலிலும் படும்' என்ற புதுமொழியை யும் நினைத்துப் பாருங்கள். படாத காலில் பட்டால் அது நடப்பவன் நடைக்கு இடையூறு உண்டாக்குவதில்லை என்ற தத்துவத்தையும் ஆராய்ந்து பாருங்கள்.

பட்ட காலிலே படுவதை நாம் உணர்கிறோம்; படாத காவிலே படுவதை நாம் உணர்வதில்லை. பணக்காரர் வீட் டுப் பிள்ளைக்குத் தும்மல் வந்தாலும் டாக்டருக்குத் தெரிந்து விடுகிறது. ஏழைத் தொழிலாளியின் குழந்தைக்கு ஜூரம் வந்தாலும் அதன் தாய்க்கே முதலில் தெரிவதில்லை. வாழ்க்கைத் தத்துவத்தை ஒட்டித்தான் பட்டகாலும் படாதி காலும் நடக்கின்றன. எனவே, படாத காலிலும் படுவது உண்டு” என்று நாம் தெரிந்து கொள்வது நல்லது.

—x–

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஆத்மஜோதி.pdf/28&oldid=1671982" இலிருந்து மீள்விக்கப்பட்டது