உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:ஆத்மஜோதி.pdf/30

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

348

ஆத்மஜோதி

பித்துக்குளி ஸ்ரீ முருகதாஸ் சுவாமிகளுடன் இருபது நாட்கள்

(நா. அருமைநாயகம்)

—சென்ற இதழ்த் தொடர்ச்சி—

பித்துக்குளி ஸ்ரீ முருகதாஸ் சுவாமிகள் நாயன்மார்களின் தேவாரப் பதிகங்களால் மேலும் சிறப்புற்று விளங்கும் திருத்தலங்களான திருக்கோணேஸ்வரத்திற்கும் திருக்கேதீஸ்வரத்திற்கும் சென்று சுவாமி தரிசனம் செய்தார். திருக்கேதீஸ்வரத்தில் நடந்து வருகின்ற கட்டட சிற்பத் திறன்கள் அவர் மனதைப் பெரிதும் கவர்ந்தன. அத்தகு வேலைப்பாடுகள் அதி சிறப்பாக இடம்பெறுவதற்குத் தாம் மறுதடவை இலங்கை வரும்போது நிதி வசூலுக்கான இன்னிசை நிகழ்த்த இறையருள் பாலிக்க வேண்டுமென விண்ணப்பித்துக் கொண்டார். திருக்கோணேஸ்வரத்திலே எம் பெருமானை வீதி வலம் வந்து வணங்குகையில் ஆங்கு திருக்கோணேசர் பாடல்கள் சுற்றவர மையினால் எழுதப்பட்டிருப்பதைக் கண்ணுற்றார். அவை எல்லாம் கருங்கற்களில் பொறிக்கப்படவேண்டும்; அப்போதுதான் அது வெகு நன்றாக இருக்கும் என்றார். இலங்கையில் யாராவது அப்பணியைத் தொடங்கிச் செய்யும் பட்சத்தில் இந்தியாவிலேயுள்ள ஆதீனமொன்றிலிருந்து கணிசமான அளவு பண கிடைக்கச் செய்யத் தாம் ஆவன செய்வாரென்று கோவில் அர்ச்சகரிடம் பித்துக்குளி ஸ்ரீ முருகதாஸ் சுவாமிகள் வாக்களித்தார். ஈழத்திலேயுள்ள சைவ அன்பர்கள் சுவாமிகளின் மேற்கூறிய யோசனைகளைச் செவிமடுத்து அவரைப் பக்கபலமாக வைத்துக் கொண்டு செயல்படுவார்களாயின் நமக்கு அது இக பர சுகங்களைத் தருமென்பதில் சந்தேகமில்லை.

சுவாமிகளோடு கூடவே வந்து அவருக்குப் பக்கவாத்தியகாரர்களாக ஒத்துழைத்தவர்களைப் பற்றி இங்கு குறிப்பிடுதல் பொருத்தமானதாகும். ஸ்ரீ.எஸ். முத்துநடேசையர், சிக்கல். ஆர். வடிவேல், திரு. எஸ். வாசுதேவராவ் மூவருமே அவர்கள். ஸ்ரீ எஸ். முத்துநடேசையர் ஓர் அற்புதமான ஆர்மோனிய வித்துவான். அவர் அமைதியாக உட்கார்ந்து தமது கை விரல்களின் அசைவுகளினால் ஆர்-

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஆத்மஜோதி.pdf/30&oldid=1544638" இலிருந்து மீள்விக்கப்பட்டது