பக்கம்:ஆத்மஜோதி.pdf/5

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

322 - ஆத்மஜோதி

ஒரா யிரமாண் டுளமொருக்கி

உருக்குந் தவத்தால் தமிழன்னை உலக முவப்பப் பயந்தெடுத்தே

உ.வே. சாமி நாதையப் பேரா தரித்துப் பேணுமகன்

பிரியத் தரியான் பேழ்கணித்தும் பேர னொருவன் தனக்குளளும்

பேறு கண்டு மகிழ்சிறப்பால் ஆராக் காதல் தலைக்கொள்ள

அகில மனத்துந் திரிந்து திரிந் தார்வங் கூரக் குதுகலித்திட்

டங்கங் கணகை யினை நீட்டி வாராய் மகனே யெனவவள்தன்

வன்னக் கரத்துட் குழைந்தணையும் வாழ்வே வருக ஜகந்நாத

வள்ளால் வருக! வருகவே! 2

வேறு

மேதைக் கலையொலி விஞ்சு தமிழ்க்கடல்: வேகக் கவிபொழி வியன்மேகம்! " விண்ணவ ரழுதமும் வேண்டல னெனுமொரு

வீருெடு தமிழ்ந்ல(ம்) நுகர்சாமி நாதக் கலைமுகில் நம்முன(ம்) மின்னிய நலமிகு செளதா மணிமின்னே! நாமத் தமிழினி ஞாலத்திடை புகழ்

நாடற் கிதுவழி யெனவாங்கே போதச் சிறுகதை பொலிதிரு முறைமலர்

புதுமைகொள் கந்த ரலங்காரப் பொற்புறு சொற்பொழி வாதிய தந்தொரு

புது வழி போற்றிய தமிழொளியே வேதப் பெருநல மிகுஜகந் நாதன்! வீறெடு வாழிய பல்லாண்டே! மிகுதமிழ் நாவலர் பாவலர் மேன்மை

விளங்கிட வாழிய பல்லாண்டே! 3.

(யாத்தவர்: வித்துவான். மு. கந்தையா அவர்கள், ΦΤίρπί

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஆத்மஜோதி.pdf/5&oldid=956217" இருந்து மீள்விக்கப்பட்டது