பக்கம்:ஆத்மஜோதி.pdf/9

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

326

ஆத்மஜோதி

புலமை; அழகும் நளினமும் செறிவும் கொண்ட அவரது பேச்சு; இனம் கண்டு இலக்கியப் பரம்பரையை உருவாக்கும் அவரது ஆய்வு; சமயத் துறையில் ஊறித் திளைத்த அவரது பக்திப் பாடல்கள்” இவை தமிழுக்கு வாய்த்த பேறுகளே ஆகும்.

எழுத்துவன்மை பேச்சுவன்மை மாத்திரமல்ல, பாடும் வன்மையும் பெற்றவர்கள்; திரு. கி. வா. ஜ. அவர்கள். நீரோட்டம் போல் வெகு லாகவமாக நூற்றுக் கணக்கான பாடல்களே ஒரே மூச்சிலே பாடி விடுவார்கள். அவரது உயர்ந்த சிறந்த கற்பனைகளுக்கெல்லாம் மூலவேர் அவரது பக்தியாகும். அவரது முருக பக்தியைக் கந்தரலங்காரச் சொற்பொழிவுகளிலே காணலாம். கந்தரலங்காரத்தில் எழுத்துக்கு எழுத்து பக்திச் சுவை சொட்டப் பேசுவார்கள். அவரது படத்தை ஆத்மஜோதியிலே வெளியிடுவதனல் ஜோதிக்கே தனிப் பெருமை உண்டு என்று கூறி அவரது தமிழ்த் தொண்டு மேலும் வளர எல்லாம் வல்ல இறைவன் அவருக்கு எல்லா நலன்களும் அருளப் பிரார்த்திக்கின்றோம்.


மலரில் தேன் இருப்பது இயற்கையே. ஒவ்வொரு மலரிலும் ஓரளவு தேன் உண்டு. ஆனால் தேன்டையில் ஒரே தேனாக இருக்கிறது. இப்படியே மனிதனுடைய பேச்சில் ரசம் ஓரளவு ததும்புகிறது. இலக்கியத்திலோ ரசங்களையெல்லாம். புலவர்களாகிய வண்டுகள் தொகுத்து வைத்திருக்கிறார்கள். மலரினூடே தேன் இருப்பதை ஆராய்ந்து பார்க்க வேண்டும். மனிதன் பேச்சினூடே ரசம் இருப்பதும் தெரியவரும். இலக்கணம் இயற்றியவர்கள், உலக வழக்காகிய பேச்சுமொழியைக் கவனித்திருக்கிறர்கள். கேள்வியும் விடையும் இலக்கியங்களைக் காட்டிலும் பேச்சிலேதான் அதிகமாகப் பயில்கின்றன. ஆகவே அவற்றைப் பற்றிய இலக்கணம் வரும்போதெல்லாம். உரையாசிரியர்கள் நாம் பேசுகிற பேச்சிலிருந்து உதாரணம் எடுத்துக் காட்டுகிறார்கள்.

கி. வா. ஜ.
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஆத்மஜோதி.pdf/9&oldid=1544432" இலிருந்து மீள்விக்கப்பட்டது