பக்கம்:ஆத்மாவின் ராகங்கள்.pdf/10

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


8 ஆத்மாவின் ராகங்கள் பாதி புரிந்தும் புரியாத நிலையில் கைகள் நடுங்கின. முதல் வரியிலேயே செய்தியைப் புரிந்து கொண்டு விட முடிந்தது

என்றாலும், சிறிது நேரம் ஒன்றுமே செய்வதற்கு ஒடவில்லை.

'பிரபல தேசபக்தரும், அறுபத்தேழு வயது நிறைந்தவரும், காந்தியக் கல்வி நிபுணரும், தியாகியுமான, சர்வோதயத் தலைவர் காந்திராமன் மதுரையருகே இன்று முன்னிரவில் தமது சத்திய சேவா கிராம ஆசிரமத்தில் மாரடைப்பினால் காலமானார். இறுதிச் சடங்குகள், நாளை மாலை நடை பெறலாமென்று தெரிகிறது.'

- என் கண்களில் நீர் நெகிழ்ந்தது. இருபது வருடங் களுக்கு முன் காந்தியடிகள் சுட்டுக் கொல்லப்பட்ட செய்திக்கு எட்டுக் காலமும் நிறையும்படி ஒரு தலைப்பு எழுதிய போது நான் இப்படிக் கண்ணிர் சிந்தியிருக்கிறேன். பத்திரிகைத் துறையில் நான் சம்பாதிக்கவும் புகழடையவும், வாழவும், சேமிக்கவும், சந்தர்ப்பங்கள் இருந்தது போலக் கண்ணிர் விடவும், பெருமிதப்படவும் கூட சந்தர்ப்பங்கள் இருந்தன. பல ஆண்டுகள் பாடுபட்டு பிஸ்மார்க் ஜெர்மனியை ஐக்கியப் படுத்தியது போல் இந்தியாவின் ஐந்நூற்றறுபத்து ஐந்து சமஸ்தானங்களைத் தமது திட சக்தியால் ஒன்றுபடுத்திய சர்தார் படேலின் மரணம், ஜவகர்லால் என்ற ரோஜாக் கனவு அழிந்த செய்தி, லால் பகதூரின் வீர மரணம், இவற்றை வெளியிடுகையில் எல்லாம் நான் ஒரு தேசபக்தியுள்ள இந்தியப் பத்திரிகை யாளன் என்ற முறையில் இதயம் துடித்து நெகிழ்ந் திருக்கிறேன். நவ இந்தியாவை உருவாக்கிய பெரியவர்கள் ஒவ்வொருவராகப் போய்க் கொண்டே இருப்பதைப் பார்த்து அக்கறையோடு பயப்படுகிறவன் நான். தியாகமும், பெருந்தன்மையும், தேசபக்தியும், தீர்மும், தெய்வ நம்பிக்கையும் நிறைந்த ஒரு சகாப்தம் மெல்ல மெல்ல மறைவதையும், பதவியும் தேர்தலும் கட்சிப்பூசல்களும் கலவரங்களுமான ஒரு காலம் எதிரே தெரிவதையும்