பக்கம்:ஆத்மாவின் ராகங்கள்.pdf/102

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

100 ஆத்மாவின் ராகங்கள்

'கொண்டு வாங்கோ அண்ணா அவளுக்குச் சர்க்காவும் பஞ்சும் கொடுத்து நூற்கப் பழக்கியதே முத்திருளப்பனாகத் தான் இருக்கவேண்டுமென இந்த உரையாடலிலிருந்து ராஜாராமனுக்குப் புரிந்தது.

'இவரிட்ட சிட்டங்களைக் கொடுத்திருக்கேன்; புடவை தான் நல்லதாக் கிடைக்கனும். '

"இவரிட்டக் கொடுத்திட்டா நல்லாத்தான் கிடைக்கும்" என்று குறும்புத்தனமாகச் சிரித்தார் முத்திருளப்பன். மதுரம் இருவரிடம் சொல்லிக் கொண்டு போய்ச் சேர்ந்தாள்.

“புறப்படலாமா?" என்றார் முத்திருளப்பன்.

'இந்தப் பெண்...' என்று ராஜாராமன் ஏதோ ஆரம்பித்த போது,

'இது பொண்னே இல்லை; சரஸ்வதி: இதை எதிரே பார்க்கறப்பெல்லாம் சாட்சாத் சரஸ்வதியையே எதிரே பார்க்கறமாதிரி எனக்கு ஒரு வாஞ்சை உண்டாறது ராஜா.

"உங்களுக்கு முன்னாடியே தெரியுமா?"

'தெரியும் சர்க்கா நான் தான் கொடுத்தேன். அரசரடித் திருவிழாவிலே வருஷா வருஷம் வீணை வாசிக்கும்; கேட்டிருக்கேன். சர்க்கா கொடுத்தப்பத்தான்- அதுக்கு யாருக்கும் சளைக்காத தேச பக்தியும் இருக்கிறது தெரிஞ்சது ஜெயில்லேருந்து வந்தப்ப- பத்தரும் எல்லாம் சொன்னார்."

வாசக சாலையைப் பார்த்துக் கொள்ளச் சொல்லிப் பத்தரிடம் சொல்லிவிட்டு, இருவரும் வஸ்திராலயத்துக்குப் புறப்பட்டனர். ராஜாராமனிடமிருந்து நூல் சிட்டங்களை முத்திருளப்பன் வாங்கிக் கொண்டார். -

'இப்பக் கதர் விற்கிறது. பெரிசில்லே ராஜா சித்திரா பெளர்ணமிக் கூட்டத்திலே நமக்கு நல்ல வாய்ப்பு இருக்கு

அதை நாம் நல்லாப் பயன்படுத்திக்கணும்' என்று ஒரு புது யோசனையைக் கூறினார் முத்திருளப்பன்.