நா. பார்த்தசாரதி 101
'உண்டியல் கூடக் குலுக்கலாமே?”
'கள்ளழகர் உண்டியலுக்குப் போட்டியாவா ராஜா?'
'அப்படியில்லை! தேச பக்தியும் தெய்வ பக்தியும் வேற வேறேன்னு நினைக்காதீங்க முத்திருளப்பன். தேசபக்தி புறங்கை என்றால், தெய்வ பக்தி உள்ளங்கை. ஒரே கையிலே தான் உள்ளும், புறமும் இருக்கு. புறங்கைக்குப் போடற மருந்து தான் உள்ளங்கையையும் குணப்படுத்தும்.'
"சரியான கருத்து ரொம்ப நல்லாச் சொல்றே!'
'என்னோட, ஜெயில்லே பிருகதீஸ்வரன்னு ஒரு புதுக் கோட்டைக்காரர் இருந்தார்னு சொன்னேனே! அவர் அடிக்கடி இதைச் சொல்லுவார். சுதந்திரப் போரை ஒரு பெரிய மகாபாரத யுத்தமாகவும், ஜஸ்டிஸ் கட்சிக்காரர்களை கெளரவர்களாகவும், நம்மைப் பாண்டவர்களாகவும், நமக்கு வழிகாட்டும் கீதையாகக் காந்தியையும் சொல்லுவார் அவர்... உலகத்திலே ஒரு மனிதனுக்கும் இன்னொரு மனிதனுக்கும் நடுவே தர்ம - அதர்ம, நியாய - அநியாயப் பிரச்சனை இருக்கிறவரை கீதை நித்யகிரந்தமாயிருக்கும் என்று அவர் அடிக்கடி சொல்லுவார்.'
'சிந்தனை புதுசா இருக்கு ராஜா!'
இ ಡ್ಗಿಳ್ புதுச் சிந்தனைகள் அவரிடம்
ருககு முததருளப்பன.' -
'நான் வேலூருக்கு வரக் கொடுத்து வைக்கலே, முன்னாலேயே கைதாகி கடலூருக்குப் போயி, முன் னாலேயே வெளியிலேயும் வந்து தொலைச்சுட்டேனே?" பேசிக் கொண்டே வஸ்திராலயத்துக்கு வந்து விட்டார்கள் அவர்கள். முத்திருளப்பன் மதுரத்தின் சிட்டத்தைப் போட்டார். திரும்ப வரும்போது புடவை எடுத்துக் கொள்வதாகச் சொல்லிவிட்டுக் கதர் மூட்டைகளோடு இருவரும் புறப்பட்டனர். ராஜாராமன் ஒரு பாரதி பாடலை மிகக் கம்பீரமான குரலில் பாடினான்.