பக்கம்:ஆத்மாவின் ராகங்கள்.pdf/104

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

102 ஆத்மாவின் ராகங்கள்

மேங்காட்டுப் பொட்டலில் கூட்டம் கூடுகிறாற்போல், ஒரிடத்தில் நின்று முயன்றார்கள் அவர்கள். பாட்டினால் கூட்டம் கூடியது.

பூதாகாரமான சரீரத்தோடு, மலை நகர்ந்து வருவது போல், ஒரு நகைக் கடைச் செட்டியார் வந்தார்.

'இவருக்குக் கதர் வித்தால் உன் மூட்டை, என் மூட்டை இரண்டுமே காணாது ராஜா' என்று ராஜாராமனின் காதருகே முணுமுணுத்தார் முத்திருளப்பன்.

ராஜாராமனுக்குச் சிரிப்பு வந்தது. அடக்கமுடியாமல் விழுந்து விழுந்து சிரித்தான். செட்டியார் கேட்டார்:

'என்னா, துணி விக்கிறீங்களா?" "துணியில்லே, கதர் விக்கிறோம்... கதர்' 'ரொம்ப சல்லிசாக் கிடைக்குமாங்கிறேன்...' 'துணியைப் பாருங்க செட்டியாரே?' செட்டியார் துணியை வாங்கிப் பார்த்துவிட்டு, 'அடியாத்தே பொணமாக் கனக்கு தே?' என்ற போது முத்திருளப்பனுக்குக் கோபம் வந்துவிட்டது. -

“எத்தினி பொணம் தூக்கி அனுபவம் உமக்கு? இத்தனை பெரிய உடம்பைத் தூக்குறிரே; இந்தத் துணியைக் கட்டினாலாவது இளைப் பீரே செட்டியாரே, வாங்கும். ' மலை கோபத்தோடு முறைத்துப் பார்த்து விட்டு நடந்தது.

வேறு சிலர் கதர் வாங்கினார்கள். அடுத்த இடமாகப் பெருமாள் தெப்பக் குளக்கரைக்குப் போனார்கள் அவர்கள். அங்கேயும் கொஞ்சம் வியாபாரம் ஆயிற்று.

மாலையில் தல்லாகுளம் பெருமாள் கோவில் அருகே போய் விற்றார்கள். ராஜாராமன் பாரதி பாட்டுப் பாடிய