உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:ஆத்மாவின் ராகங்கள்.pdf/105

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நா. பார்த்தசாரதி 103 தனால் கூட்டம் சேர்வது சுலபமாயிருந்தது. முதல் நாளை விட அன்று கணிசமான விற்பனை ஆகியிருந்தது.

ஏழு மணிக்கு வஸ்திராலயத்துக்குத் திரும்பிப்போய்ப் பணத்தையும், மீதித் துணிகளையும் கணக்கு ஒப்பித்ததும் முத்திருளப்பன் அங்கிருந்தே வீடு திரும்புவதாகச் சொன்னான். - -

ராஜாராமன் 'மதுரத்தின் நூல் போட்டதற்குப் புடவை எடுக்க வேண்டும்,' என்றான்.

'அடடா மறந்து போச்சே? எனக்கு மறந்தா என்ன? ஞாபகம் இருக்க வேண்டிய ஆளுக்கு இருக்கே" என்று அவர் கேலி செய்த போது ராஜாராமன் வெட்கப்பட்டான்.

தன்னை எப்படி மதுரம் இப்படி மாற்றினாள் என்று நினைக்க நினைக்க ஆச்சரியமாக இருந்தது அவனுக்கு. புடவையை எடுத்துக் கொண்டு வந்து கொடுத்தார் முத்திருளப்பன். அவர் அங்கிருந்தே விடை பெற்றுக் கொண்டு போனபின், அவன் வாசக சாலைக்குத் திரும்பினான்.

வழக்கமாக வாசகசாலைக்கு வெளியார் யாரும் படிக்க வருவதில்லை. ராஜாராமனும் அவன் நண்பர்களும் பத்தரும் தவிர, மற்றவர்கள் புழக்கம் அங்கே குறைவு. போலீஸ் கெடுபிடிக்குப் பயந்து தான் வாசகசாலை என்ற பெயரில் ஒரு தேச பக்திக் கூட்டத்தின் இளம் அணியினரை ஒன்று சேர்த்திருந்தான் ராஜாராமன். அது அவர்கள் எல்லோ ருக்குமே தெரியும். ஆனால், அன்று அதற்கு விரோதமாய் யாரோ பொது ஆட்கள் உட்கார்ந்து பேப்பரும் புத்தகமும் படித்துக் கொண்டிருக்கவே அவனுக்கு ஆச்சரியமாயிருந்தது. மேலே ஏறிச் சென்ற வேகத்தோடு கீழே இறங்கி வந்து -

'யாரோ படிச்சுக்கிட்டிருக்காங்களே? என்ன சமாசாரம்?" என்று பத்தரைக் கேட்டான், அவன். யாராவது சி.ஐ.டி.க் களாக இருக்குமோ என்று அவனுள் சந்தேகம் முளைத்