பக்கம்:ஆத்மாவின் ராகங்கள்.pdf/106

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


104 ஆத்மாவின் Tatar திருந்தது. காந்தி-இர்வின் ஒப்பந்தம் ஏற்பட்டு, நாட்டில் சுமுகமான நிலை தற்காலிகமாக இருந்தாலும், தயக்கம் எழத்தான் செய்தது. அவன் தன் சந்தேகத்தையும் பத்தரிடம் கூறினான்.

'அதெல்லாம் ஒண்னுமில்லீங்க தம்பி திருநாள் பார்க்க வந்து பக்கத்து சத்திரத்துல தங்கியிருக்கிற புள்ளையாண் டானுங்கதான். இங்கே கடையிலே கொஞ்சம் வேலை கொடுத்திருக்காங்க. வேலை முடியிற வரை, மேலே படிச்சிட்டிருங்க"ன்னு - நான்தான் உட்காரச் சொன்னேன். மதுரம் கூட இல்லே: -நாக மங்கலம் போயிருக்கு. :

பதிலுக்கு ஏதோ கேட்க வாயெடுத்தவன் அதைக் கேட்காமல் அடக்கிக் கொண்டான். மாலையில் நாக மங்கலம் போக வேண்டுமென்று அவள் தன்னிடம் சொல்லக்கூட இல்லை என்று தோன்றியவுடன், எதற்காகவோ அவள் மேல் கோபப்பட வேண்டும் போல் இருந்தது. அப்படிக் கோபப்படத் தனக்கு என்ன உரிமை இருக்கிறதென்று உடனே மனசில் தோன்றியது.

'இருங்க தம்பி நீற்கிறீங்களே கையில் என்ன பொட்டலம்? கதரா?"

'மதுரம் நூல் சிட்டம் போட்டுப் புடவை வாங்கிட்டு வரச் சொல்லியது...' . . . .

'உங்ககிட்ட சொல்லிடும்படு எங்கிட்டச் சொல்லிட்டுப் போச்சு. ஜமீன்தாருக்கு என்னவோ தோணிச்சாம் - திடீர்னு வந்து வீணை வாசிச்சிட்டுப் போகணும்னு ஆளனுப்பிச்சிட்டாரு! ... ஆனா ராத்தங்கற வழக்கம் இல்லை. எத்தினி மணியானாலும் வந்துடும் மங்கம்மா போகலை. வீட்டிலதான் இருக்கா. கிழவி உங்களுக்கு ராப்பலகாரம் கொண்டு வந்து கூப்பிடுவா. இருங்க, எங்கேயும் போயிடாதீங்க..."